1ஆம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி கோணலிங்கம்  நாகபூசணி 

a

                                                   பிறப்பு: 02.03.1946                                        இறப்பு: 21.04.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை நெடிய காட்டைப்  பிறப்பிடமாகவும்  தற்காலிகமாக இந்தியா திருச்சியை  வசிப்பிடமாகவும்  இருந்த திருமதி கோணலிங்கம் . நாகபூசணி  அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அன்னையே
பாசத்தின் திருவுருவே!
பண்பின் இருப்பிடமே!
உன் மணிவயிற்றில் எம்மை
பத்து மாதம் சுமந்து
உலகுக்கு தந்தவளே.

அன்பில் அன்னையாகி, கண்டிப்பில் தந்தையாகி எம் இருவரையும் தனியாக பல கஷ்டங்களின் மத்தியில் வளர்த்து ஆளாக்கிய தாயே!
நாம் சிரித்ததால் நீயும் சிரித்தது! நாம் அழுதால் நீயும் அழுது! உன்னுயிரினும் மேலாக எம்மை நேசித்த தாயே!
உன் அன்பு பேரப்பிள்ளைகளுக்கு பல கதைகள் சொல்லி ஊட்டி வளர்த்த பாசத்திருவே!
எடுத்த காரியமதை வெற்றியுடன் முடிப்பவளே!
இன்றுவரை எமக்காய் நல்வழிகாட்டி
இனிய எம் வாழ்வுகளில் நிக்கமற நிறைந்தவளே.

காலத்தின் கட்டளையால் தூரதேசமதில் வாழும் நாம் உங்களை எம்முடன் அழைத்து வைத்திருக்கும் அந்த வேளை கூடி வந்த பொழுது , காலன் வந்து கூடி சென்றானே! தாயே! உங்களை தனியே விட்ட துயர் எங்களை வாட்டுதம்மா .

இந்தியா திருச்சியில் நடைபெற்ற எம் அன்னையின் இறுதி நிகழ்வுகளில் சகல காரியங்களை செய்தவர்களுக்கும் ஒத்தாசை செய்தவர்களுக்கும் தொலைபேசி மூலம் எம்முடன் துயர் பகிர்ந்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

எமது அன்பு அன்னையின் வீட்டுக்கிருதிய நிகழ்வுகள் 10.04.2011 அன்று லண்டனில் நடைபெறும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி !

தகவல்: மகன்கள் மருமகள்மார் பேரப்பிள்ளைகள்
தொடர்பு:
கணேஷ்: +44 (0) 208 648 5138 (லண்டன் )
அமுது : +44 (0) 208 672 0598 (லண்டன் )

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com