அருமை நண்பனே பைலற்

pilotbyfriends

தோற்றம்: 28/12/1966                மறைவு: 29/04/2012

திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்
பைலற் ஞானம்

நண்பனே! அருமை பைலற் ஞானமே!
போன திசை தெரியாது திகைக்கின்றோம்
புண்ணியனே! ஏன் இந்நிலை தந்தாய்
திகைத்துப் போய் நிற்கின்றோம்

நண்பர் குழாத்திடையே எப்போதும் நீ வருவாய்
நட்பே பெரிதென எப்போதும் நீ வாழ்ந்தாய்
சிட்டுக்குருவியென வந்து நிற்பாய்
இப்போது எங்கோடி நீ மறைந்தாய்

கோடைகால விருந்துகளின் சந்தோசம்
உன்னோடு நாம் பகிர்ந்தோம்
எம்மோடு கதையாடி நீ மகிழ்ந்தாய்
என்ன நடந்தது இன்றுனக்கு?

மனம் சிதறுண்டு மரணித்து நிற்கின்றது
மரணம் உந்தனுக்கு நம்ப மனம் மறுக்கிறது
விழியிடைக் கண்ணீரை யார் தடுப்பார்
விளங்காத வாழ்வு கண்டு அழுகின்றோம்

மனைவி பிள்ளைகளுக்கு ஏது சொல்வோம்
முகம் பார்க்க முடியாது துடிக்கின்றோம்
ஆறுதலாய் வார்த்தை சொல்ல முடியவில்லை
யார் துயரை யார் ஆற்ற முடியுமையா?

கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு
நீள்துயில் கொண்டாயென ஆறுகின்றோம்
நினைவெல்லாம் உன்னோடு வாழ்கின்றோம்
கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு

உன் ஆத்மா சாந்தியடைய
காதலாகிக் கண்ணீர் மல்கிப் பிரார்த்தித்து நிற்கின்றோம்;

Aug’83 நண்பர்கள்

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com