எங்களின் கண்ணீர் அஞ்சலி!..

திரு கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்)

மண்ணில்          விண்ணில்
01-11-1929           15-12-2011

எங்களின் கண்ணீர் அஞ்சலி!..

மண்ணைவிட்டு பலமாந்தர்களும்
பிறநாடுகள் வந்தார் நீங்கள்
மண்ணிற்காக மரணம்தேடி- ஈழ
மண்ணிலே வாழ்ந்தீர்!...

உமைப்பெற்றவர்கள் பெருமைபெற்ற
அந்தமண்ணிலே
உங்கள்பிள்ளைகளால் புனிதம்பெற்ற
வல்வை மண்ணிலே!...

நீங்கள்கொண்ட காதலிற்கு உங்கள்
வாழ்க்கை நிஜசாட்சி - இன்றைய
மரணம்கூட அழிக்கமுடியாது உங்கள்
குடும்பமாட்சி!...

நாளைஎன்ற நாள் தொடர்ந்தும் நாம்
வணங்குவோம். உண்மையான
வல்வெட்டித்துறை 'மண்ணின் மைந்தன்'
உங்களிற்காய் தலைவணங்குவோம்!...

அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினர் மற்றும்
வல்வெட்டித்துறை மக்களுடன் valvai.com

15.மார்கழி.2011

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com