மரண அறிவித்தல்: திருமதி.சுசிலாவதி இராஜசுந்தரம்

Susilawathy

தோற்றம் 24.04.1945              மறைவு 08.08.2015

குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தெனியம்பை வல்வெட்டித்துறை, திருவான்மியூர், சென்னையைவசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாவதி இராஜசுந்தரம் 08.08.2015 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற இராஜசுந்தரம்  அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற  சச்சிதானந்தம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  வேலும்மயிலும் கண்ணகையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மதுமதி(இந்தியா), நீலா(லண்டன்), அன்பழகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரகாஷ்(லண்டன்), வனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இலக்கியா, ரிதன், விதுரன், அனுஷன் ஆகியோரின் ஆசைப் போத்தியும்,

காலஞ்சென்றவர்களான  மீனாவதி, சுப்பிரமணியன் மற்றும் சுந்தரேஸ், கமலரங்கன், விமலாவதி, சுகுணாவதி ஆகியோரின் அன்புச் சககோதரியும்,

காலஞ்சென்ற செல்வபாக்கியம், சோமசுந்தரம், மனோரஞ்சிதம், சுந்தராவதி,  கண்மணியம்மா, ஜெயசுந்தரம்,  காலஞ்சென்ற பாலசுந்தரம், ஜெயராணி, ஞானசுந்தரம், புஸ்பராணி, மோகனசுந்தரம், பவானி, விஜயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 10.08.2015 மதியம் 2 மணிக்கு Bezent நகர் மின்மயானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின் தகனக்கிரியைகள் நடைபெற்று  தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

முகவரி :
H 70, G 3, Mullai Apartment,
Thiruvanmyoor,
Thiruvalluvar Nagar
Chennai-41

தொடர்புக்கு:
மகன் மகள் (இந்தியா) 914424510174, 9198400746

susilawathy