மரண அறிவித்தல் - திருமதி திரிபுரசுந்தரி கந்தசாமி

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
22.06.1934           23.09.2011

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரிபுரசுந்தரி கந்தசாமி அவர்கள் செப்டம்பர் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற ஆசிரியர் கந்தசாமி அவர்களின் துணைவியாரும், காலம் சென்ற தர்மலிங்கம் இலக்குமாவதி அவர்களின் மூத்த மகளும், முத்துக்குமாரு, இராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் சிவயோகசுந்தரி (லண்டன்), குபேந்திரன் (இலங்கை), காலம் சென்ற இராமத்திலகம், அரிகரன் (கனடா), லக்சுமிராணி (கனடா), மங்கையர்க்கரசி (ஜேர்மனி;) ஆகியோரின் அன்புச் சகோதரியும் இவர் சிவகுமார் (கனடா), அமுதன் (கனடா), உமா (கனடா), மோகன் (அமெரிக்கா ) காலஞ்சென்ற முரளீதரன் அவர்களின் அன்புத்தாயாரும், சுமதி, சாந்தி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அர்ச்சனா, தீபனா, பவீனா, மயூரன், அயந்தன், ஆர்த்திகா, ஆரணியா, அகிலன், மனோஜ், கவின் காலஞ்சென்ற நிருபன் ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை  Midland and Sheppard Ave Scarborough வில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு திங்கட்கிழமை மதியம் தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.


மேலதிக தொடர்புகளுக்கு:
அமுதன் - (416) 266 9851 cell (416) 985 9851
சிவகுமார் - (905) 209 7332

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com