மரண அறிவித்தல்: திருமதி தில்லைஉமாதேவி காத்தலிங்கம்

umathev

தோற்றம் 12.08.1943              மறைவு 23.07.2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லைஉமாதேவி காத்தலிங்கம் அவர்கள் 23-07-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காத்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இன்பராணி, ரவி, காலஞ்சென்ற ராம்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சங்கரப்பிள்ளை(இளைப்பாறிய இலாகா அதிகாரி- இலங்கை புகையிரதசேவை, திருமலை), காலஞ்சென்ற சண்முகநாதன்(இரசாயன கூட்டுத்தாபன உயர்நிலை ஊழியர்- இலங்கை), மீனாஷ்சிசுந்தரம்(இளைப்பாறிய உயர்நிலை ஊழியர்- இலங்கை எழுதுவினைஞர் சேவை, வல்வை), அன்னலஷ்மி(லண்டன்), அருணகிரிநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருளானந்தம்(தாசன்- லண்டன்), கோமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிஅம்மாள், சீதாலஷ்மி, மகேசதாசன், மற்றும் அன்னபூரணிஅம்மா(கண்மணி), சிவகாமசுந்தரி(சிவகாமி), காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை(முத்தன்), செல்லப்பாக்கியம்(செல்லன்), பொன்னம்மா(பொன்னன்), ஈஸ்வரலிங்கம், அப்புலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிராகாஷ், தர்ஷன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அபிவர்ணா, தாருகேசன் ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ரவி(மகன்) — இலங்கை +94777820282
இன்பராணி(மகள்) — இலங்கை +94777156462
மீனாஷ்சிசுந்தரம்(சகோதரர்) — இலங்கை +94774704048
அன்னலஷ்மி(சகோதரி) — பிரித்தானியா +442085907460
அருணகிரிநாதன்(சகோதரர்) — ஜெர்மனி +4921613034114