Home

veda

வல்வெட்டித்துறையின் தங்கங்களாம்  அங்கங்கள்!....

கந்தவன  கடவையிலே
சிந்துகின்ற  அருளைப்பெற்று
சந்தமென  நாம்நடந்தால்
சொந்தமெனும்  கொலனிவரும்

ஊறுகின்ற  நீராலே
பேருபெற்ற  ஊறணியும்
சேருகின்ற  இடத்திலே
சேர்ந்துவரும்  நெடியநகர்

சந்திக்கு  முன்னாலே
சங்கீதம்  பாடவென
முந்திவரும்  வேம்படியும்
மிச்சமுள்ள  குச்சம்கண்டால்

வெண்மணல்  பரப்பினிலே
வெண்ணிலவின்  ஒளிசிரிக்கும்
கடல்கன்னிக்கு  ஒளிகாட்டும்
ரேவடியும்  இங்கேயுண்டு

அரசமர  நிழலிலே
அரசனவன்  நானேயென்று
முரசம்பல  கொட்டியன்று
விழித்திருந்த  எங்கள்சந்தி

அம்பாளின்  அடிதனிலே
ஓரடியாம்  மதவடியும்
அஞ்சாமல்  அருகிருக்கும்
ஆலடியும்  இங்கேயுண்டு

ஒற்றுமையின்  உயர்வினையே
உரைத்துநிற்கும்  ஆதிகோவில்
கடல்தத்துவத்தின்  பெருமையினால்
காலமெல்லாம்  உயர்ந்திருக்கும்

உற்சாகமாய்  எமையழைக்கும்
ஊரிக்காடு  எனுமொன்று நாம்
கல்விகற்பதற்காய் காத்திருககும்;
சிதம்பராவும்  அங்கேயுண்டு

மௌனமான  மொழிகள்பேசி
மயக்கவரும்  மயிலியதனை
கௌரவமாக  தலைநிமிர்ந்து
காட்சிதரும்  சின்னமலையும்

பார்த்துநாம்  வழிநடந்தால்
கேட்டுவரும்  காட்டுப்புலம்
காற்றினிலே  மிதந்துவரும்;
இன்னிசையில்  அதுஉலவும்

பெரியமலை  என்றுரைக்க
பெருமைநாம்  பெற்றிருந்தால்
அடுத்துவரும்  அரசடியும்
அன்புடனே  அரவணைக்கும்

கந்தோரடி  கண்டுவிட்டால்
கற்பனையில்  சிறகடிப்பார்
பிந்திவரும்  தம்பிதனை–அங்கே
முன்னெடுப்பார்  பிள்ளையாரும்

கற்பூர  வாசனையில்
கண்களெல்லாம்  குளமாகும்
வெற்றிவேல்  பாசறையாம்
சந்நிதியும்  அதன்பெயராம்

 

தொண்டைமான்  அகன்றெடுத்த
தொண்டினால்  அதுஉலவும்
வல்லிநதி  எப்பொழுதும் எங்கள்
எல்லையாய்  அதுமிளிரும்

வேறு:-

காட்டுவளவு  இருக்கு
காலமெல்லாம்  களிப்பதற்கு
கேட்டுவரும்  அடுத்து
கொத்தியால்  எனும்துடுக்கு

மீனாட்சி  கோவிலுண்டு
மீன்பாடும்  இடமடுத்து
சடையாண்டி  கோவிலுண்டு
சந்தியின்  முகமடுத்து

துணிவுகள்  பலபிறக்கும்
தெணியம்பை  எனுமொன்று
கனிவுகள்  தினமிருக்கும்
கவலைகள்  அதுதுடைக்கும்

வித்தனை  எனும்போது
தத்துவம்  பலஇருக்கும்
முத்தமிழ்  நிலத்தினிலே
கற்புடன்  அதுசிரிக்கும்

தீருவில்  திடலிருக்கும்
தீந்தமிழ்  மணமிருக்கும்
ஊரினில்  ஓர்புறமாய்
உள்ளநல் வயலிருக்கும்

பூச்சிமுத்தான்  என்றுரைத்தால்
பேச்சினிலே  சுவையிருக்கும்
காய்ச்சிவிட்ட  பாலெனவே
கரவத்தனையில்  அதுசிறக்கும்

மறவரின்  உறைவிடமாய்
மாணாங்காணை  எனுமிடமாம்
திறமைகள்  பலவிருந்தும் ஏனோ
துறவறம்  பூண்டிருக்கும்

அமைதியின்  உறைவிடமாய்
ஆண்டவன்  அருளிடமாய்
மனச்சுமைகளின்  முடிவிடமாய்
வேவிலெனும்  கோவிலுண்டு

வல்வெட்டி  எனுமொன்று
வல்வையின்  அணைப்பிலுண்டு
நெற்கொழு  வரப்புமுண்டு
வீரவரலாறு  அதற்குமுண்டு

பொலிகண்டி  கரையிருக்கு
பொங்குநல்  உழைப்பிருக்கு
வலுவுடன்  ஒற்றுமையாய்
வாழுவதும்  வல்வையுடன்

கம்பர்மலை  கொம்பன்தறை
காண்பதற்காய்  நாம்விரைந்தால்
அம்மணமாய்  எமையழைக்கும்
அத்தனையும்  பசுமைகளே

கொண்டைக்கட்டை  என்றும்
வண்ணாவளவு  என்றும்
சொன்னால்  பலஇருக்கும் அவை
சொச்சமாய்  இதிலிருக்கும் !.....

தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்

vstp

Valvai Science & Technology Park (VSTP)

மனிதன் ஒரு சமூகப்பிராணி என அரசியல் விஞ்ஞானம் கூறுகின்றது. தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசியம் எனும் நான்கு நிலைகளில் மனிதவாழ்கையை சமூகவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இந்நான்கு நிலைகளில் இருந்தும் ஒவ்வொருமனிதனும் தன்னையும் தனது செயல்களையும் மதிப்பீடு செய்துகொள்ளலாம். செயல்கள் சிந்தனையைத் தொடர்ந்து வரவேண்டும் அவைகளே ஆரோக்கியமான செயல்களாக பின்பு உருவகம் கொள்கின்றன. இவ்வகையில் மூன்றாம் நிலையில் காணப்படும் சமூகம் என்பதனை ஆரோக்கியமான செயல்களுடன் இணைக்கும் போது ஆரோக்கியமான சமுதாயம் மலர்கின்றது.

பொதுவாகவே ஒரு நெருக்கடி உருவாகும்போது அதனின்றும் தப்பித்துக்கொள்ள அதற்கு முந்தைய காலத்திற்கு திரும்பும் எண்ணமே எல்லோர்கும் வரும். ஆனால் நடைமுறையில் காலத்திற்கு ஏற்ப யாவையுமே மாறிவிட்டிருக்கும். இதனால் பழையவாழ்கைமுறை, பழையஇலட்சியங்கள், பழையநடைமுறைகள் திரும்பவும் நிலைபெறவேண்டும் என எண்ணுவதை விடுத்து காலத்திற்கு ஏற்ப எம்மை நாமே புதிதாய் நிர்மாணம் செய்து கொள்ளவேண்டும். இன்றையவாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளிற்கு அமைதியான தீர்வைப் பெற்றுக்கொண்டு வரும் எங்களுடைய புதியதலைமுறைக்கு ஒற்றுமை. அமைதி, சுதந்திரம் நிறைந்த சமுதாயத்தை விட்டுச்செல்வதே எமது கடமையாகின்றது.

            வல்வெட்டித்துறை......சொல்லவே இனிக்கும்!.... இச்சொல்லின் பின்னே எத்தனையோ கதைகளும் கனவுகளும் எதிர்பார்புக்களும் ஏக்கங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் ஏனைய மனிதர்களைப் போலவே வாழவேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றமுடியாமல் ஓர் இடைவிடாத போராட்டம் வெவ்வேறு வகையில் காணப்படுகின்றது. இது உலகில் எல்லா மனிதருக்கும் பொதுவானது. ஆனால் எமது நிலையோ வித்தியாசமானது. ஒரு குடும்பமாய் ஒன்றுபட்டிருந்த எமது சமூகம் தேசியம் என்னும் சூறாவளியால் சிதறுண்டு போனது. பல குடும்பங்களின் இணைவே சமூகம் எனப்படுவது. பல சமூகங்களின் இணைப்பினால் தேசியம் உருவாக்கப்படுகின்றது. ஆனால் வல்வெட்டித்துறையில் ஒரு குடும்பமே ஓரு சமூகமாக காணப்பட்டது. இங்குதான் நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றோம். இதனாலேயே மற்றவர்களிற்கு வழிகாட்டவும் ஓரு தேசிய இனப்பிரச்சனைக்கு நம்பக்கையூட்டி அதனூடாக ஓருஇனத்திற்கு தலைமையேற்கவும் எம்மால் முடிந்தது. ஏனெனில் தேவை என வரும்பொழுது 'எங்களுடைய' என ஒன்றுபட்ட உணர்வில் நாம் உடனடியாகவே ஒன்று சேர்ந்தோம். இது மற்றைய சமூகங்களில் காணமுடியாத தனித்துவமானதும் இயற்கையிலே எமக்குக் கிடைத்த சிறப்பியல்புகளில் ஒன்றுமாகும்.

             இன்று தலைமையேற்று வந்த நாம் சிதைந்த நிலையில் தனித்து விடப்பட்டிருக்கின்றோம். சொந்தமண்ணாம் வல்வெட்டித்துறையில் 'நான் வல்வெட்டித்துறை' யான் என வாழ்ந்து கொண்டிருப்பவர்களைவிட பிரித்து நோக்கினால் இலண்டனிலும் கனடாவிலும் தமிழ்நாட்டிலும் வாழும் வல்வையரின் தொகை மிக அதிகமாக காணப்படுகின்றது இதனைவிட நாம் புலம்பெயர்ந்து வாழும் எட்டு நாடுகளில் காணப்படும் வல்வையின் நலன்புரிச்சங்கங்களும் இவைகளை ஒன்றிணைக்கும் தாய்நில 'வல்வெட்டித்துறை ஒன்றியமும்' அவுஸ்ரேலியா, இலண்டன், டென்மார்க்  ஆகிய நாடுகளில் இயங்கிவரும் ஊருக்கான இணையத்தளங்களும் உலகளாவிய வல்வையரை ஒன்றிணைக்கும் வல்வைக்கான valvai.com இணையத்தளமும் பொருளாதாரம் என்பதற்கு அப்பால் வல்வெட்டித்துறை என்ற எமது உயிரினும் மேலான ஊர் உணர்வைத் தொடாந்து தாங்கும் தூண்களாக கடமையாற்றுகின்றன.

இன்று பல மேற்போக்கான ஆய்வாளாகளும் போர்க்கால சூழ்நிலையை முப்பது வருடகாலமாகவே கணிப்பிடுகின்றனர். ஆனால் எமதுமண்ணில் சுதந்திர காலத்தில் இருந்தே மக்களின் மனநிலையும் சமூகப்பின்புலமும் பெரும் மோதல் உருவாகும் வாய்பினை எப்பொழுதும் தோற்றுவித்தவாறே நகர்ந்து வந்துள்ளது வெளிப்படையானது. நாற்பது வருடங்களிற்கு முன்பே அதற்கான தயார்ப்படுத்தலில் எமதுமண் ஈடுபட்டிருந்தது வரலாறு தரும் செய்தியாகும். சமூகத்தின் பொருளாதாரம் உயர்நிலையில் காணப்பட்ட அக்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. ஆனால் நாற்பது வருடங்களின் பின்னால் சிதைந்த நிலையில் இன்று காணப்படும்  வல்வெட்டித்துறையை எதிர்காலத்தில் 'ஆரேக்கியமான சமுதாயம்' ஆக கட்டியெழுப்பவேண்டிய பெரும்பணி எம்முன்னால் காத்துக்கிடக்கின்றது.

பாரம்பரிய பெருமைமிக்க வல்வெட்டித்துறை ஆரேக்கியமான சமுதாயமாக மாற்றமடைய வேண்டுமெனில் கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம், போக்குவரத்து, தொழில்வாய்ப்புகள் என்பன எமது மண்ணில் நிறைவான தாக்கப்படவேண்டும். அதேவேளை இத்துறைகள் யாவும் விரிபுபடுத்தப்படவும் நவீன மயப்படுத்தலுக்கும் உட்படவேண்டும். இவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதியானபொருளாதார பின்புலமும் அது தளம்பாதிருக்க சரியான திட்டமிடலும் தேவைப்படும். இதற்கு சரியான அறிவூட்டல் அவசியமாகின்றது. அறிவு என்பது பெறப்படும் கல்வியிலும் கூடிய பயிற்சியினாலுமே கிடைக்கின்றது. இவ்வாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படும் இவைகளினூடாகவே வளர்ச்சிபெற்ற சமுதாயம் ஒருபுறத்தில் உருவாகும். அதேவேளை மறுபுறத்தில் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, சமயம் என்பன தொடர்ந்து பேணப்படவேண்டும். இவ்வாறே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகின்றது. 'அறிவும் ஆற்றலும் நற்குணமும் பண்பாடும் கொண்ட சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம்'என சமூகவியலாளர்கள் வரையறை செய்துள்ளனர்.

இத்தகைய சமூகத்தின் அங்கமான தனிமனிதர்களிடம் அன்பு, நேர்மை, கூட்டுறவு, பொறுப்புணர்வு, மனிதநேயம், மரியாதை, அமைதி, ஒற்றுமை, எளிமை, சுதந்திரம், தனித்துவம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. எதையும் உறுதியாக பிரதிபலிக்கும் தன்மை இவைகளுடன் நிறைந்தமனமும் காணப்படும். இத்தகைய நற்குணங்களுடனேயே வல்வெட்டித்துறை மக்கள்  என்றும் காணப்படுகின்றனர். இத்தகைய சமுதாயத்திற்கு முன்கூறிய கல்வி, மருத்துவம், பொதுசுகாதாரம். போக்குவரத்து, தொழில்வாய்புகள் என்பவற்றை முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் எதிர்கால வல்வெட்டித்துறையை ஆரோக்கிய சமுதாயமாக மாற்றவேண்டும்.

தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்

வல்வை மக்கள் சார்பில் எமது நன்றிகள்

rasathi

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை அவர்கள் 11 -05 -2012 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற காலஞ்சென்ற (தண்டையல்) பார்வதிப்பிள்ளை அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு. சுங்கரநமச்சிவாயம் அவர்களின் மருமகளும், காலஞ்சென்ற திரு. சங்கரவேலுப்பிள்ளை சட்டத்தரணி அவர்களின் மனைவியும், மற்றும் பத்மலோஜனி, உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி சுந்தரசிகாமணி புவனலோஜனி, பரமசிகாமணி PhD,  பரிஸ்டர் இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மேலும் விபரங்களுக்கு

vstp

Valvai Science & Technology Park (VSTP)

வல்வையில் ஒரு விஞ்ஞான தொழில்நுட்பவியல் தொகுதி மையம் ஓன்று அமைப்பதற்கு கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்.

உங்களின் கருத்துகளை பின்வரும் ஈமெயில் இற்கு அனுப்பிவைக்கவும்.

  • முகுந்தன் அண்ணா vdag01@gmail.com ((UK) 07766408004)
  • தமிழ்நீ பொன் சிவகுமாரன் vdag02@gmail.com ((Can) 905 673 0314)

 

  • வல்வை விளையாட்டு அரங்கம் திறப்புவிழா
  • வல்வையின் ஏக்கமும் நோக்கமும் கவிதை
  • வல்வை விளையாட்டு அரங்கம் திறப்புவிழா அழைப்பிதல்
  • Valvai FUTSAL Ground by Kuttymani Anna Stage 03
  • Valvai FUTSAL Ground by Kuttymani Anna Stage 02
  • Valvai FUTSAL Ground by Kuttymani Anna Stage 01
  • குட்டிமணியண்ணா தனது நேரடிப்பார்வையில் வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கும் சமூக அபிவிருத்தித்திட்டம் Futsal (5-a-side football.) Ground புட்சால் விளையாட்டு மைதானம். படங்கள்

Capt. Vaithiyakumar அவர்கள், செயன்முறை மூலமும். Projector மூலமான காணொளியைப் பார்த்து விளக்கங்கள் தர முன்வந்துள்ளார். கப்பற் துறைசார் சகலருக்குமான அடிப்படை அலகுகள் இங்கு கற்பிக்கப்படும். எதிர்வரும் 28-04-2012 சனிக்கிழமையிலிருந்து கற்கைநெறி ஆரம்பமாகின்றது. எமது இளைஞர்களின் நன்மை கருதி இவையாவும் இலவசமே.!!!!

ஆதிகோவிலடி கல்விக்கூடம் அமைப்பதற்காக லண்டன் வாழ் ஆதிகோவிலடி மக்கள் ஓன்று கூடி நடாத்திய கலந்துரையாடலின் படத்தொகுப்புகள் இணைப்பு.

ரேவடி ஞானவைரவர் - படத்தொகுப்புகள் இணைப்பு.

வல்வை முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டிடத்திறப்பு விழாவும் ஆரம்பநாள் அங்குரார்பணமும் 15/04/2012 படத்தொகுப

Valvai Seaman Welfare Association

  • வல்வை சிவன் கோவில் தீர்த்தததிருவிழா - படத்தொகுப்பு இரண்டு
  • வல்வை சிவன் கோவில் தீர்த்தததிருவிழா - படத்தொகுப்பு ஓன்று
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் தேர்த்திருவிழா - தேர்த்திருவிழா
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 14ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 13ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 12ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 11ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 10ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் 9ம் திருவிழா் - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் திருவிழா் ( படத்தொகுப்பு முருகவேல் சண்முகன் ) - Photo Gallery
  • வல்வை வைத்தீஸ்வரன் சிவன் விஞ்ஞாபனம் அறிவித்தல்

Kalai Kalachchara Mantram Valvai

  • வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் தேர் திருப்பணி
  • நெடியகாடு பிள்ளையார் கணக்கு அறிக்கை 2012

VSWA Valvai Seamen's Welfare Association Photo Gallery

VSWA Valvai Seamen's Welfare Association English Classes

Capt.S.பாஸ்கரனது குடும்பம் விடுமுறையில் இவ்விடம் வந்த போதும் ஓய்வின்றி எமது மாலுமிகளின் முன்னேற்றத்திற்காக பல கற்கை நெறிகளை கற்பித்தனர். விசேடமாக வல்வையில் உள்ள பல இல்லத்தரசிகள் உட்பட பல பெண் அரசாங்க ஊழியருக்கும் மொத்தமாக 62 பெண்களுக்கு ஆங்கிலம் பேச (Spoken English) கற்பித்தார். திருமதி.சியாமளா பாஸ்கரன், செல்வி.செவ்வந்தி பாஸ்கரன் இருவரும் அயராது உழைத்தனர். மேலும்.....

புதுவருடத்தில் வாழ்த்துக்களுடன் வல்வை.கொம்

social development 3

economical development 2

social development 2

social development 1

cultural development 1

educational development 1

econonical development 1

development

vuc

anpudan

இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது.

  • கலைச்சோலைக் காலெண்டர் 2012
  • நம்மூரைப்போலவருமா வல்வைப்படங்களுடன் பாடல்
  • நம்மூரைப்போலவருமா அம்மன் தீர்த்தப்படங்களுடன் பாடல்
  • குட்டிமணியண்ணா எழுதும் உன்வெற்றி உனது மனதில்
  • ஆரோக்கியமான சமுதாயம் வல்வை

car paali

எம்மை அரவணைக்க காத்திருப்பது அன்னையும் அன்னைமண்ணாம் வல்வை மண்ணும்தான். PonSiva

  • Valvai Ontrium Youngsters Tour Photo Gallery
  • Youngsters from Valvettithurai visit Parliament news
  • Valvettithurai Students attend Italian Opera news

healthier society

புலம் பெயர் வாழ் வல்வை இளம் சமுதாயத்தினர் வல்வையிலுள்ள இளம் சமுதாயத்தினருடன் சேர்ந்து இயங்குவதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் உரிய ஆயதங்களை செய்யும் முனைப்பாக புலம் பெயர் வாழ் வல்வை இளம் சமுதாயத்தினருக்கு விடுக்கும் வேண்டுகோள். ஒரு சமுதாயம் நிலைதளம்பாத, நிலைகுலையாத, பேணியலுகையான சமுதாயமாகவும் (Stable and Sustainale), பொருளாதார அபிவிருத்தியில் முழுமையுமடைய வேண்டுமானால் அதற்கு தகுந்த கல்வியறிவு இருக்க வேண்டும். மேலும்.......

healthier society

விஞ்ஞான கணிப்பின்படி ஒருவர் பிற்காலத்தில்வெற்றியுடன் ஒரு முழுமையான மனிதனாக முதிர்ச்சியடைவார் என்பதற்குரிய அறிவு உள்வாங்குதல் அவர் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் 20% (வீதமும்), 5 இலிருந்து 12 வயதிற்குள் 20% (வீதமும்), மிகுதி 60% (வீதமும்) எஞ்சிய வாழ்கைக் காலத்திலும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும்.......

ஆரோக்கியமான சமுதாயம்

வல்வையில் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் அமையவேண்டும் என்பது எமது நீண்டகால ஆசை, ஏன் என்று கேட்டால் அதற்கு நிறைய சொல்லவேண்டி இருக்கிறது. "வல்வை அல்லது வல்வெட்டித்துறை என்று சொல்லும் போது எமது உடல் முழுக்க மெய்சிலிர்கிறது, எவ்வளவு இனிமையான சொல்". இந்த கூற்றுக்கு பின்னால் 1980ஆம் ஆண்டு காலங்களுக்கு முன்னால் நாம் வாழ்ந்த வளமான, செழிப்பான, முழுநிறைவான, மனம்நிறைந்த வாழ்க்கை முறைதான் காரணம். மேலும்.......

நெடியகாடு பிள்ளையார் நிர்வாக கணக்கு அறிக்கை Aug 2011

நோர்வே - தமிழ்த் திரைப்பட விழாவில் கனடாவில் உருவான ஸ்டார் 67 திரைப்படம்AR67 Poster

வல்வை இளைஞர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முழுநீளத்திரைப்படம் STAR 67. தனது கலைத்திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ள கதி செல்வகுமார் அவர்கற்கு எமது பாராட்டுகள். STAR 67

காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.

தமிழ்நீ.பொன்.சிவகுமாரன் (26.11.2011)

then till now

பாய்மரக்கப்பல்கள் வகைகளும் பிரிவுகளும் / Types of Sailing Ships

sailing ships

Annapooraniammal from Valvai ( Florance C Robinson) is a Hermaphrodite Brig

Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more detail


  • then till today
  • திருவிழா படங்கள்
  • திருவிழா படங்கள்

 

    Upcoming Events

 

 

Contact Administrator: admin@valvai.com / vdag01@gmail.com / (UK) 07766408004
                   Contact Writer: ponsiva@valvai.com / vdag01@gmail.com / (Can) 905 673 0314