தாய்நில, புலம்பெயர் வல்வை மக்களுக்கு
தாய்நில, புலம்பெயர் வல்வை மக்களுக்கு
நான் வல்வெட்டித்துறையான் என இறுமாப்புடன் மார்தட்டிக்கொள்ளும் எமது உறவுகளுக்கும், சுவர் இருந்ததால்தான் சித்திரம் வரையலாம், அந்த சுவரைக்கட்டியெளுப்பவே கடந்த இரண்டு வருடங்களாக வல்வை.கொம் அரும்பாடு பட்டுக்கொண்டிருகிறது.
- ஒரு சமுதாயம் நிலைதளம்பாத, நிலைகுலையாத, பேணியலுகையான சமுதாயமாகவும் (STABLE and SUSTAINABLE SOCIETY), பொருளாதார அபிவிருத்தியில் முழுமையுமடைய வேண்டுமானால் அதற்கு தகுந்த கல்வியறிவு இருக்க வேண்டும்.
- கல்வி அறிவு இரண்டு வகையானது,
- ஓன்று செயல்முறைசாராக் கல்வி (சர்வகலாசாலைக்குரிய) ACADEMIC EDUCATION
- இரண்டாவது தொழில்முறைக் கல்வி VOCATIONAL EDUCATION
- இக்கல்வி தராதரத்தையடைவதற்கும் அதன் முக்கியதுவத்தை முழுமையாக உண்ணர்ந்துகொள்வதற்கும் அந்த சமுதாயம் கலாச்சாரம் பண்பாடு நிறைந்த (CULTURAL MATURITY) முற்போக்கு சிந்தனையுள்ள கட்டுக்கோப்பான சமுதாயமாக (SOCIAL MATURITY) இருக்க வேண்டும்.
- இதனால் வல்வையில் நாம் ஒருபக்கமான அபிவிருத்தியை மட்டும் செய்வோமானால் அதனுடைய முழுமையான பலனை பெறாமல் போவதோடு அது நிலைத்து நிற்காமல் அழிந்து போய்விடும்.
- சமூக மற்றும் கலாச்சார அபிவிருத்தியுடன் இணைந்து கல்வி அபிவிருத்தியை முன்னெடுத்து பொருளாதார அபிவிருத்தியில் நமது செயட்பாட்டுகளை ஒருமுகப்படுத்துவோமானால் நல்லதொரு சமுதாயத்தை வல்வையில் நாம் கட்டியெளுப்ப முடியும்.
- இதற்கு எமக்கிடையே இருக்கும் புரித்துணர்வை வளர்க்கவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் செய்த பிழைகளை மன்னித்து மறந்து ஒன்றாக செயற்பட வேண்டுமென்று எல்லா வல்வையர்களையும் கேட்டுகொள்கிறோம்.
- நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமுகப்பட்டு எல்லாவிதமான அபிவிருத்தி திட்டங்களையும் எம்மிடையே பகிர்ந்து ஒரேநேரத்தில் செய்வோமானால்தான் அதன் பலனைக்காணமுடியும்.
- நடைமுறையில் உள்ள திட்டங்களும் செய்யவேண்டிய திட்டங்களும் VALVAI.COM இல் போட்டிருக்கிறோம். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தாய்நில, புலம்பெயர் வல்வையர்களின் ஆதரவை எதிர்பார்கிறோம்.
வல்வை.கொம் இன் பார்வையாளர்களாகவே மட்டும் இல்லாமல், பங்காளர்களாகவும் மாறுங்கள் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல வல்வை இறைதெய்வங்களின் அருளுடன் புது வருட வாழ்த்துக்ககளுடன், உங்கள் வாழ்வு சிறக்கவேண்டும், அதனால் வல்வையின் வாழ்வும் சிறப்படையும்
இப்படிக்கு உங்கள் வல்வை.கொம்
தொடர்புகளுக்கு: (uk) +44 (0) 7825 556 626 / (Canada) 001 905 673 0314
vdag01@gmail.com
