vswa

VALVAI SEMEN’S WELFARE ASSOCIATION (VSWA)

வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்

மேற்படி இச்சங்கமானது பல வருடங்களிற்கு முன்பாக உருவாக்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வந்தது. இதில் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். காலப்போக்கில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து இயங்காமல் போய்விட்டது.

தற்போது இதன் ஆரம்பகால உறுப்பினர் சிலரும், தற்போது கப்பலில் உயர் பதவி வகிப்போரும், உயர் பதவிகளிலிருந்து தற்போது வெளிநாடுகளில் தொழில் புரிவோரும் இச்சங்கத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இச்சங்கத்தின் பிரதான நோக்கம் வல்வையில் உள்ள மாலுமிகளிற்கும் கப்பற்றுறையில் புதிதாக சேரவிருபவர்களுக்கும், சர்வதேச கடல்சார்ந்த தராதரத்திற்கு (International Maritime Standard) பயிற்சியளித்து உயர்த்துவதே.

தற்பொழுது உலகெங்கிலும் உள்ள கப்பல்களில் நவீன கருவிகள், புதிய தொழில் நுட்பத்துடனான முறைகள் அதிகரித்துள்ளன. இதுமட்டுமல்லாமல் சர்வதேச கடல் சார்பு சட்டம் (International Maritime Law) நாளுக்குநாள் இறுகிக்கொண்டே வருகின்றது. ஆகவே இதற்கேற்ப எமது மாலுமிகளையும், எதிர்கால மாலுமிகளையும் தயார்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையாகும்.

தற்பொழுது மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகக் கப்பல்களையே நம்பியிருக்கும் எமது மாலுமிகளிற்கு பயிற்சியளிப்பதன் மூலம் சர்வதேசக் கப்பல்களில் தொழில்புரிய எதுவாயிருக்கும். ஆகவே இந்நோக்கங்களை மேலும் ஆராயுமுகமாகவும், விளக்கமளிக்குமுகமாகவும் ஒரு கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இடம்: வல்வை அ.மி. பாடசாலை (A.M.School)

காலம்: 23 ம் திகதி ஓக்டோபர் 2011 (ஞாயிறு)

நேரம்: கலை 9 00 மணி

சிறப்பு விளக்கவுரை: கப்டன் N.கலைநேசன்

பொதுமக்களும், மாலுமிகளும், மாலுமிகளாய் இருந்து ஓய்வுபெற்றோரும், ஆக பயிட்சிபெற தராதரமுள்ளோரும். இவர்களது பெற்றோரும், கல்விமான்களும், வல்வையின் வளர்ச்சியில் தீவிர ஆர்வமுடையோரும் பங்குபெறுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் சார்பாக

ஐ.கா.ரஞ்சனதாஸ்

( ஓய்வுபெற்ற கப்பல் பொறியியலாளர்)

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com