செய்திக் குறிப்பு:04

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியிலும், ஒருமைப்பாட்டிலும் சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

                                                                        வல்வை நகரபிதா நடராஜா அனந்தராஜ்

செய்திக் குறிப்பு:04

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியிலும், ஒருமைப்பாட்டிலும் சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.  வல்வை நகரபிதா

“எமது வல்வெட்டித்துறையின் கல்வி, பொருளாதாரம், பொதுச்சுகாதாரம், உட்கட்டமைப்பு, பொழது போக்கு வசதிகளை மேம்படத்தும் நோக்கில் நாம் இங்கே ஒன்றாக இணைந்திருக்கின்றோம். கடந்த கால மன அழுத்தங்களில் இருந்தும் விடுபட்டு இந்த மண்டபத்தில் அரசியல் வேறுபாடற்ற சமத்துவமான ஒரே குறிக்கோளுடன் சேர்ந்திருக்கும் எம் ஒவ்வொருவரின் உணர்வுகளும், சிந்தனைகளும் வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியிலும், வல்வை மக்களின் சந்தோசமான சுபீட்சமான வாழ்வை மேம்படுத்துவதிலுமே குறியாக இருக்கவேண்டும். இந்த சபை எப்பொழுதும் தலைவர் என்றோ துணைத் தலைவர் என்றோ, எதிர்க்கட்சித் தலைவர் என்றோ வேறுபாடற்ற ஒரு சபையாக  சமத்துவம் உலாவும் மன்றமாக விளங்கவேண்டும். நாம் ஒன்றுபட்டு உழைப்போமாயின் வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்மாதிரியான ஒரு மன்றமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. வல்வெட்டித்துறை நகர மக்கள் எந்த இலச்சியத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களை இங்கே அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களின் மனங்களைச் சந்தோசப்படுத்த வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்”.

 வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் இரண்டாவது அமர்வு, 30 ஆம் திகதி வெள்ளிக் கிழமை நகராட்சி மன்ற மண்டபத்தில் நடைபெற்ற பொழுது, நகரபிதா நடராஜா அனந்தராஜ் அவர்கள் குறிப்பிட்டு சபையின் ஒன்பது உறுப்பினர்களையும் வரறேறு உரையாற்றினார்.

இவ்வமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான தி.ஜெகதீஸ் (வினோத்), க.ஜெயராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான பொ.தெய்வேந்திரன், திருமதி.இந்திரன் கைலாயினி உட்பட திருவாளர்கள் க.சிவாஜிலிங்கம், சூ.சே.குலநாயகம் , க.சதீஸ், ம.மயூரன் மற்றும் அலுவலகத்தைச் சேர்ந்த செயலாளர் திருமதி.ச.சந்தியோகம், பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி.சி.சாந்தி, தொழில் நுட்ப அலுவலர்களான எஸ்.இராஜேந்திரன், சி.சதா, விடய முகாமைத்துவ உதவியாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நகர அபிவிருத்தி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டமையானது வல்வெட்டித்துறையின் நகர அபிவிருத்தி வெகு தொலைவில் இல்லை என்பதைக் காட்டுவதாக சபையின்  உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

(படம்:2)

vuc09

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com