vuc

வல்வெட்டித்துறை நகரசபை

நகரபிதா

veda

திரு.ந.அனந்தராஜ்


அன்பும் உண்மையும் உள்ள 'நகரபிதாபிதா' திரு.அனந்தராஜ் மாஸ்டர் அறிவது

'கோமாதா' வின் கொலைக்களம் தவிர்த்த உங்களதும் உங்களின் கீழ்ச்செயற்படும் ஏனைய நகரசபை உறுப்பினர்களதும் ஏகமனதான முடிபு அறிந்து மிகவும் மகிழ்வடைந்தோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சலுகைகளிற்கான கிறிஸ்தவமத மாற்றங்களிற்கு எதிராக முன்ணணியில் நின்று போராடிய 'பெரியவர்' வெங்கடாசலம் பிள்ளை மற்றும் கிறிஸ்தவ கண்டனங்களிற்கு புகழ்பெற்ற வைத்திலிங்கப்  புலவர் என்பவர்களின் போராட்டத்தின் எச்சமாக வல்வெட்டித்துறையில் அடையாளம் காணப்பட்டதே மேற்படி தடையாகும். அதனை இன்றும் தொடரும் உங்களின் செயல்களிற்கு எங்களின் வாழ்த்துக்களுடன் எங்கள் மண்ணின் தனித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்திய மண்ணின் மைந்தர்களாகிய உங்களனைவருக்கும் புலம்பெயர்ந்த வல்வை மக்களாகிய எங்களின் நன்றிகளும் என்றும் உரித்தாகட்டும்.

valvai.com 16 மாசி 2012

vuc

          வல்வெட்டித்துறை நகரபிதா தெரிவிப்பு

வல்வெட்டித்துறை நகர சபையின் ஒன்பது உறுப்பினர்களதும் ஏகமனதான அனுமதியுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மயிலியதனை மயானத்தில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த மாடுகளை வெட்டுவதற்கான கொல்களத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் சபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகர பிதர்நடராஜா அனந்தராஜ் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை நகரம் இந்து கலாசாரப் பின்னணியில்சைவ ஆகம மரபுகளைக் கொண்ட ஒரு நகரமாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், மயிலியதனை மயானத்தைப் பயன்படுத்தும் மக்களின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும்  மதிப்பளிக்கும் வகையில் கொல்களம் அமைப்பதை நிறுத்துவதற்கு சபை தனது ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அவரதெரிவித்தார். அதேவேளை குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்து கொள்வதறகான ஒரு ஊடகமாக அநதமயான பூமியை எவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

news28

news27

news26

news25

news24

புலம்பெயர் உறவுகளுக்கு வல்வை மண்ணில் இருந்து வாழ்த்துக்கள்

2011இன் கடந்த கால துயரங்கள் நிறைந்த சோகமான வாழ்வு பனி போல் மறைந்து, மலரும் புத்தாண்டு எமது மக்களுக்கு  சுபிட்சமான வாழ்வையும் அமைதியையும் சமாதானத்தையும் அள்ளி வளங்கும் ஆண்டாக விளங்க நாம் ஒவ்வொருவரும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக. ஏமது மக்களின் மனங்களில் குருரத் தன்மைகள் அற்றுப்போகவும், விரோதங்கள்அகலவும், ஒருவரை ஒருவர் நேசித்து அன்காட்டும் மனப்பாங்கைப் பெறவும் பிறந்துள்ள 2012 ஆம் ஆண்டு வழி சமைத்துக் கொடுக்கவேண்டும். எங்கள்உறவுகளுக்கு வல்வை நகராட்சி மன்றத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் உங்களுடன்,சேவைக்காக நடராஜா அனந்தராஜ், நகர பிதா

news23

வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய கட்டடப் பணிகள் ஆரம்பம்

வல்வெட்டித்துறை சகரசபைக்காக முத்துமாரி அமமன்  ஆலயத்திற்கு வடக்குப் புறமாக ஏற்கனவே ஆரம்பித்து நிதிப்பற்றாக் குறையினால் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நகரசபைக்கான கட்டடத்தின் கட்டுமானப்பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக நகரபிதா எடுத்த முயற்சியினால் 'என்றிப்' செயல்திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான கலாநிதி எஸ்.சிவகுமார் அவர்களுடைய உதவியினால் மீண்டும ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக என்றிப் (ENrEP) செயல் திட்டத்தினால், 15மில்லியன் இலங்கை ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. 200 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் டயா கொன்ஸ்ரக்ரர்ஸ் நிறுவனத்தினால் இரவு பகலாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்வரும் முத்துமாரி அம்மன் ஆலய பெருந்திருவிழாவுக்குள் இந்தக் கட்டப் பணிகளைப் பூர்த்தியாக்கி ஒப்படைப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந் தமையால் வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

news22

பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு

வல்வெட்டித்துறை நகர சபைத் தீர்மானத்தின்அடிப்படையில் வல்வெட்டித்துறையின் மையப்பகுதயில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிரந்த இராணுவமுகாம்கள் மற்றும் காவல் நிலையத்திற்காகப் பணன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வீடுகள், கடைத் தொகுதிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளித்து வல்வை நகரை இயல்புநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஜனாதிபதி, வடமாகாண ஆளுநர் மேஜர்.சந்திரசிறி, அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் ஆகியோருக்குக் கடிதங்களைஅனுப்பியும், ஆளுநர் மற்றும் அரச அதிபருடன் நேரில் தொடர்பு கொண்டும் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 22 ஆம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர்நகரபிதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது உடனடியாக யாழ்ப்பண வீதியின்கிழக்குப்புறமாக உள்ள கடைத்தொகுதிகளையும், வீடுகளையும் விட்டுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதேவேளை தற்போது காவல் நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வீடுகளுக்கான வாடகையைச் செலுத்திவருவதாகவும், வீட்டீன் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தித் தருமாறு கேட்டுக் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு வீட்டு உரிமையாளர்கள் தமக்குத் தேவையெனக் கோரும்பட்சத்தில் விரைவில் அந்தப் பகுதி வீடுகளையும் கையளிப்பதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர்நகரபிதாவிடம்  தெரிவித்திருந்தார்.

vuc

வல்வைநகர சபை: வாசிப்புக் கலாசாரமும், உயர்மட்டச் சிந்தனையும்.

vuc

தேசியவாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றோர்.

vuc

வல்வெட்டித்துறையில் நூல் கண்காட்சியில் பெருந்திரளானோர் வருகை

vuc

திண்மக்கழிவகற்றலில்  நகர சபை எதிர்நோக்கும்சவால்கள்

news 016

news 016

news 15

“வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்”                                                                                             -வல்வெட்டித்துறை  நகரசபையில் தீர்மானம்

news14

நகரசுத்திகரிப்புக்கான மின் உபகரணங்கள் அன்பளிப்பு. வல்வெட்டித்துறை மண்ணின் நலன்விரும்பி ஒருவர் அண்மையில் நகர பிதா திரு.நடராஜா அனந்தராஜ் அவர்களிடம் நகர சபை அலுவலகத்தில் வைத்துக் கையளித்தார். அந்த உபகரணங்களை வழங்கியமையுடன் நில்லாது தனதுநேரத்தையும் பாராது, தொடர்ந்து நான்கு நாட்கள் வரை அவற்றை இயக்கும் முறை பற்றியும் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு விளக்கமளித்து செய்து காட்டினார்.

equip 04

news 13

வல்வெட்டித்துறைநகராட்சி மன்றத்தின் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள

news 12

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வழங்கப்படும் சிறுதொழில் ஊக்குவிப்புக் கடன் திட்டம்

vuc

vuc

vuc

news8

வல்வையில்  சிறு தொழில் ஊக்குவிப்பு கடன் வழங்கும் திட்டம்.

29.10.2011 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு வல்வை மகளிர் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.

 

theepavali

news7

news6

news5

for us

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியிலும், ஒருமைப்பாட்டிலும் சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.  வல்வை நகரபிதா.

vuc

 

“வாசிப்புக் கலாசாரத்தினூடாக பண்பாடுகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன”. வல்வை நகரபிதா நடராஜா அனந்தராஜ்.

vuc

 

செய்தி(2)புலம் பெயர்ந்து நிரந்தரமாக வாழும் உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள். நகர பிதா நடராஜாஅனந்தராஜ்

vuc

28 மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டு அது தொடர்பான பொது மக்களின் விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட நெல்சிப் செயற்றிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மத்தியில் நகர பிதா நடராஜா அனந்தராஜ் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கின்றார்.

'இக் கலந்துரையாடலில் சகர சபைஉறுப்பினர்களான திரு.பொ.தெய்வேந்திரம், திரு.தி.ஜெகதீஸ், திருமதி.இ.கைலாஜினி ஆகியோரும்கலந்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.'

vuc

anantharaj

vuc

anantharaj

vuc

anantharaj

வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் முடிபுகள்
                              ஒரே பார்வையில் !...

             23.ஆடி.2011 நடந்த வல்வெட்டித்துறை நகரசபைக்கான  தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும் அவர்களின் இலக்கங்களும் அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும்.

வேட்பாளர் பெயர்                   வாக்குகள் இலக்கம்
    1 .   நடராசா அனந்ததராஜ்           1436 08
    2 .   கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 1165 06
    3 .   கந்தசாமி சதீஸ்                                  771 03
    4 .   மகாலிங்கம் மயூரன்             758 09
    5 .   தில்லையம்பலம் ஜெகதீஸ்          654 02
    6 .   சூசைப்பிள்ளை X குலநாயகம்    458 11
    7 .   பொன்னுத்துரை தெய்வேந்திரன்* 457 07
    8 .   கனகராஜா ஜெயராஜா             399 04
    9 .   இந்திரன் கைலாஜினி* 199 01

 

*இவர்கள் இருவரும் (7 & 9) “ஐக்கியமக்கள் சுதந்திரமுன்ணணி” என்னும் கட்சிப்பெயரில் போட்டியிட்டவர்கள்.                          

Valvettithurai Urban Council

valvai urban council

key to success

Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more details...



 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com