செய்திக் குறிப்பு:23
வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய கட்டடப் பணிகள் ஆரம்பம்

செய்திக் குறிப்பு:23
வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய கட்டடப் பணிகள் ஆரம்பம்
வல்வெட்டித்துறை சகரசபைக்காக முத்துமாரி அமமன் ஆலயத்திற்கு வடக்குப் புறமாக ஏற்கனவே ஆரம்பித்து நிதிப்பற்றாக் குறையினால் இடையில் நிறுத்தப்பட்டிருந்த நகரசபைக்கான கட்டடத்தின் கட்டுமானப்பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக நகரபிதா எடுத்த முயற்சியினால் 'என்றிப்' செயல்திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான கலாநிதி எஸ்.சிவகுமார் அவர்களுடைய உதவியினால் மீண்டும ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக என்றிப் (ENrEP) செயல் திட்டத்தினால், 15மில்லியன் இலங்கை ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. 200 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் டயா கொன்ஸ்ரக்ரர்ஸ் நிறுவனத்தினால் இரவு பகலாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்வரும் முத்துமாரி அம்மன் ஆலய பெருந்திருவிழாவுக்குள் இந்தக் கட்டப் பணிகளைப் பூர்த்தியாக்கி ஒப்படைப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந் தமையால் வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
N.Anantharaj
Chairman
வல்வெட்டித்துறை