செய்திக் குறிப்பு:28

news28

செய்திக் குறிப்பு:28

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமனாற்றில் இயங்கும்

மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது. இந்த நிலையில் வல்வெட்டித்துறை நகர சபையில் எடுத்த தீர்மானத்தைச் செயற்படுத்தும் வகையில் கௌரவ ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளரும், முன்னாள் கல்விச் செயலாளருமான திரு.இளங்கோவன் ஆகியோருடன் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அதனை தொண்டைமானாற்றில் மீண்டும் நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அது தொடர்பாக  அமையவுள்ள இடம் தொடர்பாக முயற்சிகளை மேற்பொண்ட பொழுது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய பிரதம குருக்களில் ஒருவரான திரு.அ.அகிலேந்திர ஐயர் ஆற்றங்கரை யோரமாக உள்ள சுமார் 48 இலட்சம் ருபா பெறுமதியான காணியை வல்வெட்டித்துறை நகர சபை ஊடாக தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்காக அன்பளிப்பாக வங்கியுள்ளார்.
அதற்கான கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கு முகமாக கடந்த செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டும் வைபவம் சம்பிரதாய பூர்வமாக செல்வச் சந்நிதி முருகன் ஆலய பூ வழிபாட்டுடன் இடம் பெற்றது. இவ்வைபவத்தில் தொண்டைமானாறு வெளிக்கள நிலைய ஆரம்பகால ஆலோசகலாகச் செயற்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் கொட்டகொட, இதனைக் கட்டுவதற்கான ஆரம்ப நிதிஉதவி வழங்கும் நிறுவனமாகச் செயற்படும் டில்மா குழுவினர், அசோகன், வெளிக்கள நிலையத்தின் தலைவர் பேராசிரியர்.க.சின்னத்தம்பி, வல்வெட்டித்துறை நகரபிதா திரு.ந.அனந்தராஜ், ஆளுநரின் செயலாளர் திரு.ஐ. இளங்கோவன், பாராளுமன்ற  உறுப்பினர் கௌரவ.சில்வெஸ்ரர், வெளிக்கள நிலைய செயலாளர் திருமதி.இராஜாராம், முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா, வெளிக்கள நிலையத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், நகர சபை உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், பொறியியலாளர் சஞ்சீவன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக ஒரு விரிவுரை மண்டபத்தைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக டில்மா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.



DSC00469
படம்:1-வெளிக்கள நிலையத்திற்கான பிரதேசத்தைச் சுத்திகரிக்கும் பணியில் வல்வை நகரசபைத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

 

DSC00472

படம்-2 : தொண்டைமானாறு வெளிக்கள நிலையக் கட்டட அமைவு தொடர்பாக பேராசிரியர் கொட்டகொட, டில்மா பணிப்பாளர் ஆகியோர் விளக்கமளிக்கின்றனர். அருகில் நகரபிதா ந.அனந்தராஜ், திருமதி.இராஜாராம் ஆகியோர் நிற்கின்றனர்.

 

DSCI0518

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படம்-3: திரு.இ.அகிலேந்திர ஐயர் அவர்களால் வல்வெட்டித்துறை நகர சபையூடாக நன்கொடையாக வழங்கப்பட்ட ஆதனத்தின் உரிமைப்பத்திரத்தை வெளிக்கள நிலையத் தலைவர் பேராசிரியர க.சின்னத்தம்பியிடம் நகரபிதா ந.அனந்தராஜ் வழங்குகின்றார்.

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com