செய்திக் குறிப்பு:09

வல்வையின் உப தவிசாளராக சதீஸ் பதவி ஏற்பு

                            - நகர பிதா வாழ்த்து

செய்திக் குறிப்பு:09

வல்வையின் உப தவிசாளராக சதீஸ் பதவி ஏற்பு - நகர பிதா வாழ்த்து

11.11.2011 அன்று மு.ப. 11.00 மணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையின் துணைத் தலவராக திரு.கந்தசாமி சதீஸ் சம்பிரதாய பூர்வமாகப்பதவி ஏற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் தவிசாளரின் அலுவலக முன் வாசலில், நிறைகுடம்பூரண கும்பம் வைத்து, தலைவர் மற்றும் சபையின் உறுப்பினர்களால்வரவேற்கப்பட்டார். சிரேஸ்ட தொழில் நுட்ப அலுவலர் திரு.எஸ்.இராஜேந்திரன் மாலை சூட்டிவரவேற்க திரு.நடராஜா அனந்தராஜ் அவர்கள் கைலாகு கொடுத்து அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று கடமை ஏற்றல் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டார்.

       அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற வரவேற்புக் கூட்டம் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நகர பிதா நடராஜா அனந்தராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில்  தலைமையுரையாற்றும் பொழுது நாம் வகிக்கின்ற பதவிகளோ அல்லது கதிரைகளோ எங்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதை உணர்ந்து எமது மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகளை எமது பதவிக்காலத்திற்குள் மேற்கொண்டு அவற்றை நிறைவுக்குக் கொண்டு வரவேண்டும். நாங்கள் அலங்கரிக்கும் கதிரைகளால் நாங்கள் பெருமையடையக் கூடாது. எங்களால் கதிரைகள் பெருமையடைய வேண்டும் அந்தவகையில் உப தலைவராக விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தல் ஆணையாளரால் உப தலைவராகத்தெரிவு செய்யப்பட்ட திரு.க.சதீஸ் தனது மக்களுக்குத் தேவையான சேவைகளைஅரசியர், பிரதேசம், மதம், சாதி என்பவற்றிற்கு அப்பால் நின்று அந்தச் சேவையால் பெருமையடைய வேண்டும். அதே வேளை ஒரு நகர சபையின் செயற்பாடுகளில் பல நிறைவான செயற்பாடுகளும்இருக்கலாம், குறைகளும் இருக்கலாம். குறைகளை எங்களிடம் நேரில் வந்து மனம் திறந்து பேசுங்கள். நிறைவான விடயங்களை மற்றவர்களிடம் கூறிப் பொருமைப்பட்டுக் கொள்ளுங்கள். எங்களுடைய நகர சபையின் கதவுகள் எந்த நேரமும் உங்களுக்காகத் திறந்து இருக்கும். வாருங்கள், வந்து மனம் திறந்து பேசுவோம் அந் நல்ல உறவுகளினூடாக எங்களுடைய நகரத்தை கல்வி, பொருளாதாரம், உட்கட்டுமானம், கலைத்துறை, விளையாட்டுத்துறை,பொழுது போக்கு வீதி அபிவிருத்தி ஆகியவற்றில் மேலோங்கிய ஒரு நகரமாகக் கட்டி எழுப்ப உன்றிணைவோம். ஏன்று கூறித் தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களான திருவாளர்கள் க.சிவாஜிலிங்கம், சூ.சே.குலநாயகம், க.ஜெயராஜா, ஆகியோருடன், எஸ்.சதாசிவம், கணேஸ், ஜெகநாதன், மு.தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரைகளை ஆற்றினர். நிறைவாக செயலாளர் திருமதி.வி.சந்திரயோகம் அவர்களின் நன்றியுரையுடன் வைபவம் நிறைவெய்தியது.

vuc pict 01

படம்: (1): திரு.க.சதீஸ்உப தலைவராகக் கடமையேற்கும் வகையில் நகர பிதா நடராஜாஅனந்தராஜ் முன்னிலையில் சம்பவத்திரட்டுப்பதிவேட்டில் கையொப்பமிடுகின்றார்.

vuc pict 02

படம்2: சமாதானநீதிவானும், உறுப்பினருமான திரு இசூ.சே.குலநாயகம் முன்னிலையில் சதடதியப்பிரமாணம் எடுக்கின்றார். அருகில் திரு.க.சிவாஜிலிங்கம் காணப்படுகின்றார்.

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com