வல்வை.com பற்றி

தமிழ், ஈழம், உயிர், என்பனபோன்று மூவெழுத்துக்களால் உருவாக்கப்பட்டதே வல்வை என்ற சொல்லாகும். வெறும் சொல்லாகவன்றி சொல்லும்போதே தினவெடுக்கும் வல்லமை கொண்ட இதன் பொருளானது வல்வாய் என்ற சங்கத்தமிழ் சொல்லின் திரிபாகவும் வல்வெட்டித்துறை என்ற வங்கக்கடலோர நகரத்தின் மறுபெயராகவும் காணப்படுகின்றது.

ஆர்த்தெழும்பும் அலைகடலின் ஆரத்தழுவல்களினால் அமைதியாக உறங்கும் இந்நகரம் ஆண்டவன் படைப்பில் மிக மிக அற்புதமானது. உறங்கும் எரிமலைபோல் இதுவா வல்வெட்டித்துறை? என ஆச்சரியத்தன் விழிகளையே அகலத்திறக்க வைத்தன!

இம்மண்ணின் கதைகள்.

ஜம்புகோளத்துறை. மாந்தை. ஈழவூர் என்னும் ஏனைய பிரதேசங்களப்போலன்றி இரண்டாயிரம் வருடம் கடந்தும் உயிர்ப்புடன் விளஙகுவதும் வரலாறு படைப்பதும் எங்கள் மண்ணாகும். ஆனால் இதன் தொல்லியல் சின்னங்களையும் வரலாற்றையும் தேடி எந்த ஆய்வாளரும் அகழ்வாராய்ச்சிகளை மேற்க்கொள்ளவில்லை.

ஏனெனில் எரிமலைக்குள் எப்படி? யாரால் முடியும்?..............ஆராய்சிகள்!......... எம்மால்முடியும்!.........ஆம் மீன்குஞ்சிற்கு நீச்சலும் புலிக்குட்டிக்கு பாய்ச்சலும் புதிதாக யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை. கற்றதில் இருந்தே மேலும் கற்போம். எங்கள் கற்பகதருவை மேலும் கனம் பண்ணுவோம்.

வல்வையில் பிறந்தவர்கட்கும் வல்வையர் என்று சொல்லிக்கொள்ளும் அனைவருக்கும் ஆனது இந்தக்களம். ஆம் இதுதான் வல்வையின்தளம். (றறற.எயடஎயi.உழஅ)உங்கள் ஆக்கங்கள் வல்வையைச் சுட்டியதாகட்டும். வல்வெட்டித்துறையின் வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம், காவில், நாகரீகம், கடலோடும்பாங்கு, என்னும் இன்னோரென்ன விடயங்களை தாங்கியதாக அது இருக்கட்டும். எல்லையில்லாப் புகழ்படைத்த வல்வைத்தளத்தின் எல்லையே இதுதான்!

இறந்தகாலம் எதிர்காலம் நாம்எழுதும் இக்காலம் அனைத்தும் எங்களிற்காக எங்களிற்குள்ளே எம் எதிற்காலச்சந்ததிக்காக உங்கள்வரவுகளும் இதற்குள்ளே!.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்! வல்வையர் யாவரும் எம்மவராவீர்”