மரண அறிவித்தல்: திரு மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம்

Ilatchumithevi

தோற்றம்: 11/4/1932              ​​​மறைவு: 11/4/26

திரு மகாலிங்கம் சங்கரகாந்திலிங்கம் (அரச ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்,ஆங்கில ஆசிரியர், அகில இலங்கை சமாதானநீதவான்,அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்).

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,முதிரக்கட்டை நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட சங்கரகாந்திலிங்கம்
11/4/26  சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம், ருக்குமணி ஆகியோரின் 2வது மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா ஆகியோரின் மருமகனும், காலம்சென்ற கமலாதேவியின் அன்பு கணவரும், மாதவன் (லண்டன்), ருக்மணிதேவி (வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற பாஸ்கர், சிவா (லண்டன்), குமரன் (ஆஸ்திரேலியா), ரமணி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

சுரேந்திரதாஸ், நந்தகுமாரி, நித்தியானந்தசெல்வி, சாதனா, யசிந்தா,  உமாசேகரன் ஆகியோரின் மாமனாரும்.

திலீபன், பிரியந்தன், பிரியங்கா, பிரவீந், சாதுரியன், அனன்யா, பிரணவன், பிரித்தி, கதிர்சன், நிகிதா, நிவோயன் ஆகியோரின் அன்பு பேரனும். தலைவன், காவலன் ஆகியோரின் பூட்டனும்

காலஞ்சென்ற மகாலிங்கம் கனகலிங்கம் அவர்களின் சகோதரனும், சுகிர்தாதேவி, பாலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனருமாவார்.

காலஞ்சென்ற இந்திரலிங்கம், தியாகிலிங்கம்,M.K.சிவாஜிலிங்கம் (தவிசாளர் வல்வெட்டித்துறை நகரசபை ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), வசந்தினி ஆகியோரின் சிறிய தந்தையுமாவர்.

அன்னாரின் இறுதி கிரியைகள் வீட்டில் நடைபெற்று  திங்கள் (13.04.2026) மாலை 4.00மாலை ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
ருக்மணிதேவி சுரேந்திரதாஸ் 0094778303676
மாதவன் 00447947270876
சிவராமலிங்கம்(சிவா)
00447400686486
குமாரலிங்கம்
0061403203844
ரமணி உமாசேகரன்
00447930105916

 

Mr. Ramalingam Vallipuram