மரண அறிவித்தல்: திரு கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

தோற்றம் 20.10.1931              மறைவு 25.09.2016

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்  (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பவளக்கொடியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் மற்றும்  பூரணலக்ஷ்மி, சிதம்பரநாதன்  ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

ரேணுகா, மனோகர், வசந்தா, பிறேம்குமார்   ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிறீதரன், விஜயலக்ஷ்மி, பவீந்திரன், சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும் காயத்திரி, தாட்ஷா,  ரோகினி, சுகந்தன், ராகுலன், பிரவீன், நவீன் மற்றும் வருணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கையற்செல்வம், மாணிக்கவாசகர், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.09 2016 செவ்வாயன்று பி.ப. 6.30 முதல் 8.30 வரை Guardian Funerals, Cnr Sunnyholt Road and First Avenue, BLACKTOWN 2148  இல்  பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகளுக்காக 28 .09.2016 புதனன்று Pine Grove, West Chapel, Kington Street, Minchinbury NSW 2770 இற்கு மதியம் 1.30 க்கு  எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 3.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன் மனோகர் + 61 434 656 019 (சிட்னி)
மகன் பிறேம்குமார் (PK) + 61 410 607 427 (சிட்னி)
மருமகன் சிறீதரன் + 61 411 035 578  (மெல்பேர்ன்)
மருமகன் பவீந்திரன் + 61 414 193 698 (சிட்னி)

திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை