31 ஆம் நாள் நினைவஞ்சலி: அமரர் திரு.கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் (இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்)

mohanathaas

தோற்றம் 31/10/1993              மறைவு 18/05/2015

கடந்த 18.05.2015 அன்று இறைபதம் அடைந்த அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17.06.2015அன்று புதன்கிழமை காலை அன்னாரது மகன் பாலசுப்ரமணியம் கிருஷ்ணசாமி( குஞ்சு)இல்லத்தில் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து நடைபெறும் சபீண்டிகரண நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

          (தகவல்: குடும்பத்தினர்)
               
                குடும்பம் என்னும் கோயிலில்
                தலைவன் என்ற பெருமையுடன்
                எமக்கெல்லாம் ஒளிவிளக்காய்
                சுடர்விட்டுப் பிரகாசித்தீர்கள்

                நேசமுள்ள தந்தையாய்
                பாசமுள்ள நண்பனாய்
                நல்வித்தை கற்றுத் தந்த
                அறிவு மிக்க ஆசானாய்
       
                ஆலமரம் போல் நின்று
                எமையெல்லாம் காத்து நின்றாய்
                தெய்வமே நீ எங்கே சென்றாய்
                உன்பிரிவு எமை வாட்டுகின்றதே

                அவனியிலே ஆயிரம் ஆயிரம்
                உறவுகள் இருந்தாலும்
                அப்பா என நாம் அழைக்க
                நீ இப்பூவுலகில் இல்லையே

                எம் நெஞ்சம் கனக்கின்றது
                விழிநீர் அறியாமல் சொரிகின்றது
                உங்கள் ஆத்மா சாந்தியடைய
                இறைவனை வேண்டுகின்றோம்.

                (மருமகள் வேணுராதா)

தகவல் குடும்பத்தினர்.

உதவி அரசாங்க அதிபர் வீதி,               
( A.G.A. Lane)                                             
நெடியகாடு,வல்வெட்டித்துறை
          தொ.பே : 94+ 0783035349 / 0784804560
                                0772824642 / 217914939

krishnasamy