1ம் ஆண்டு நினைவஞ்சலி: அருமைச்சந்திரலிங்கம் மலர்ரோவிணி அம்மா ( அம்மன்)

alliyamma

தோற்றம் 22.12.1947              மறைவு 01.01.2015

யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைச்சந்திரலிங்கம் மலர்ரோவிணி அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையே எங்கள் அன்புத் தெய்வமே
ஆயிற்று ஓராண்டு நீங்கள் மறைந்து
மாதம் ஒரு மாசியம் வந்தது
கூடியிருந்து உங்கள் கதைபேசி உண்டோம்!

பாலுடன் பாசத்தை ஊட்டி வளர்த்தவரே
பரிதவிக்கிறோம் பாசத்தை இழந்து
உங்கள் ஆசியால் பெற்ற உயர்கல்வியால்
உவகை கொள்கிறார்கள் பேரப்பிள்ளைகள்!

எங்கள் இதயங்கள் இன்பச்சுமையால் கனக்கின்றன
அங்கே சிம்மாசனம் போட்டு நீங்கள் வீற்றிருப்பதால்
எங்கள் நாடி நரம்பெல்லாம் ஓடித்திரிகிறீர்கள்
சற்றே ஓய்வெடுங்கள் அம்மா!

நின்றால், நடந்தால், இருந்தால் உங்கள் நினைவுகள்
உறங்கினால் உங்கள் கனவுகள்
சந்திரனில் உங்கள் முகத்தைப் பார்க்கிறோம்
சந்திரன்தான் தினமும் வருவதில்லையே!

நித்தம் ஏற்றுகிறோம் குத்து விளக்கை
அதன் ஒளியில் உங்கள் வண்ணமுகம் காண

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிராத்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 21-12-2015 திங்கட்கிழமை அன்று 82, White House Cre’s, Brampton, Canada என்னும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமிர்தராஜன் பிரதீபா — பிரித்தானியா +447868703259
கபிலராஜ் மைதிலி — நோர்வே +4722253399
கலாஜினி அசோக்குமார் — கனடா +19057944761
ரகுராம் சசிகலா — கனடா +19057949068
கீதா வாசன் — கனடா  +19057944761