முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 26.02.2013 - திருமதி.நவரெத்தினம் மங்களாதேவி

mangala

அன்னையின் மடியில்:12/01/1955          ஆண்டவன்அடியில்:22/02/2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.நவரெத்தினம் மங்களாதேவியின் முதலாம்ஆண்டு நினைவு திதியை முன்னிட்டு கிரியைகள் செவவாய்கிழமை(26/02/2013)அன்று 43/3a லிங்கநகர் திருகோணமலை அவருடைய இல்லத்தில் நடைபெறும் என்பதினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

"அம்மா"

அம்மா என்ற சொல்லுக்கு வரவிலக்கணம் நீ!

அம்மா உங்கள் இழப்பினை ஏற்கமுடியாமல் வாழ் நாள் எல்லாம் எங்கள் கண்களில் வழிகிறது கண்ணீர். உன்னையே கொடுத்திருக்கிறாய் எங்களுக்காக நாங்கள் உன்னை வைத்து பார்க்கு முன் ஏன் பிரிந்தாய் எங்களை மீளாத்துயரிலிட்டு.

பத்துமாத விசப்பரீட்சையில் விடைகண்ட வித்துக்கள் நாம் அந்த வித்துக்கள் முளைத்து மரமாகுமுன் ஏன் பிரிந்தாய் எங்களை விட்டு

உன்னை இழந்து வாடுகின்றோம் உன் அன்புக்காக ஏங்குகின்றோம் இனி யார் தருவார் உன் கனிவான அன்பை. அம்மா! அப்பா உன் துனையின்றீ வாடுகின்றார்,உன் இழப்பை ஏற்க முடியாமல் தவிக்கின்றார் அப்பாவை தேற்ற முடியாமல் தவிக்கின்றோம் நாம்

உன்னை விட்டு பிரியமுடியாமல் தவிக்கும் எங்கள் தவிப்பை நீ அறியவில்லையா அம்மா, இன்றுடன் நீ எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடம் உருண்டோடி விட்டது ஆனாள் இன்று எங்கள் முன் நிழளாய் நீ!!

 

உங்கள் இழப்பினால் வாடும்
கணவன், பிள்ளைகள், மருமகன், பேரன், சகோதரச கோதரிகள், மாமி, மச்சாள்மார், அண்ணண்மார், மச்சான், பெறாமக்கள், மருமக்கள்

தகவல்:
நவரெத்தினம்(இலங்கை): 00 94 725059873
சுதர்சன்(லண்டன்): 00 44 7904776426
சாருமதி(லண்டன்) 00 44 2086897338
சுஜீவன்(இலங்கை): 00 94 778808442
சுஜன்(இலங்கை) 00 94 778914276

 

mangala

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com