மரண அறிவித்தல்: திருமதி சிவகுகதாசன் இராஜேஸ்வரி (ஆச்சி அக்கா)

தோற்றம் 11.11.1935              மறைவு 31.10.2015

வல்வெட்டித்துறை வித்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுகதாசன் இராஜேஸ்வரி (ஆச்சி அக்கா) இன்று (31) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், இலட்சுமி அம்மா ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பொன்னாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகளும்,

திரு.சிவகுகதாசனின் (ஓய்வுபெற்ற அதிபர்) அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெகதீசன் மற்றும் ஜெயந்தி, ஜெயரூபன் மற்றும் வசந்தி, அன்புத் தாயாரும்,

அபர்ணா மற்றும் செல்வச்சந்திரனின் அன்பு மாமியாரும்

மயூரன், கேசவன், பிரபாகர், கோபிகா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு பேத்தியாரும்

காலஞ்சென்ற துரைசிங்கம் மற்றும் இராசலிங்கம், இரத்தினசபாபதி, இரத்தினசாமி, இராஜலட்சுமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 31 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வித்தனை, வல்வெட்டித்துறை இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் 5 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகட்கு - 00 94 21 205 5057