மரண அறிவித்தல் - திரு கந்தசாமி பாலசேகரம் (முட்டாசியண்ணா)

theiva

ஆன்னை மடியில் 10/05/1942                ஆண்டவன் அடியில் 17/10/2013

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசேகரம் (முட்டாசியண்ணா) அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று மட்டக்களப்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான ரத்தினம் செபபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இன்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வி, வாணி, கெளரி ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மற்றும் உலகபாஸ்கரம்பிள்ளை, அருந்ததிராணி(ராணி), வீரரமணி(ராதா), ஜெயசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஒஸ்மன், ஆபிட், யாழினி, உமா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2013 திங்கட்கிழமை அன்று மட்டக்களப்பில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மனைவி - இலங்கை 94653652364
பிரபு (பேரன்) - இலங்கை 94756005523
ஜெயம்(சகோதரர்) - பிரித்தானியா 442082008398 / 447886653667

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com