மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி நடராஜா

theiva

மலர்வு 27/02/1933                உதிர்வு 17/08/2013

ஊறணி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி.  பரமேஸ்வரி  நடராஜா அவர்கள் 17.08.2013 சனிக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ந.நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நா.சின்னத்துரை - அன்னஜானகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி(ராஜன்) மற்றும் தர்மராஜா(பாபு), நளினா, ரகுபதி, காஞ்சனா, நிரஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தமயந்தி, சுபாஸ்ரஞ்சன், ஆனந்தி மற்றும் பிரமேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஹரிஹரன், அருண், வித்யா, விஷால், யாதவ், சித்தார்த், ராகவ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் அன்புப்  பேத்தியாரும், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தவேல், சதானந்தவேல் மற்றும் தாயுமானவர், மகாலக்ஷ்மி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை மற்றும் தர்மலிங்கம், அன்னலக்ஷ்மி, ரோகிணியம்மா மற்றும் சந்திரவதனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரது  ஈமக்கிரியைகள் 18.08.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று, வெள்ளவத்தை  இல. 18, ஈ .எஸ்.பெர்நாந்தோ மாவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து, தகனக்கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் 10.00 மணியளவில் நடைபெறும்.

 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள், மருமக்கள், குடும்பத்தினர்.
தொடர்பு : +94 11 2582555, +94 11 2500147

parameswary

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com