31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் - திருமதி பிரணவி பிரகாஷ் (பிரேமி)

piranavi

அன்னை மடியில் 17/03/1984                 ஆண்டவன் அடியில் 28/10/2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் இரத்தினவேல் அவர்களின் பாசமிகு மனைவியான மட்டு.புளியந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவி பிரகாஷ் பிரணவி பிரகாஷ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

என் வாழ்வின் விடிவெள்ளியே பிறேமி
வாழவந்த வேகத்தில் என்னைத்
தவிக்கவிட்டுப் போனதேனோ?
என்ன பாவம் செய்தேன்
தவிக்கின்றேன் நீயில்லாது...

பிறந்த வீட்டை செழிக்கவைத்து
புகுந்த வீட்டையும் சிறப்பித்தாய்!
நீயில்லாமல் ஏங்கும் என்
ஏக்கம் உனக்குப் புரிகின்றதா??

விண்ணுலகத் தெய்வத்தின்
இறக்கையுள் சேர
என் சந்தோஷ இறக்கையை
உடைத்தது ஏனோ??

இனிதான இன்ப நினைவுகளைத்
தந்தணைத்த நீ
நினைவுகளை சுமையாக்கி
சென்றதேனோ?

கனவான உன் ஆசைகளை நிஜமாக்கி
என்றும் உன் நினைவுகளுடன் வாழ்வது நிஜம்.

எங்கள் சொல்லொணாத் துயரத்தில் பங்கேற்க நேரில் வந்தோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோரிற்கும், அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு பல வழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரிற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

02-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிமுதல் பி.ப 4:30 மணிவரை Chak 89,105 Bound Road, Mitcham, Surrey, CR4 3HG என்ற முகவரியில் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
பிரகாஷ் குடும்பம்(திரு. திருமதி இரத்தினவேல், திரு. திருமதி மகாதேவா)

தொடர்புகளுக்கு

பிரகாஷ் — பிரித்தானியா  செல்லிடப்பேசி: +447932770878
ரவிக்குமார்(அப்பு ரவி) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447942866961
மகாதேவா — இலங்கை தொலைபேசி: +94652222408
ரத்தினவேல் — நியூஸ்லாந்து தொலைபேசி: +6494808477
ரமணன் — பிரித்தானியா  செல்லிடப்பேசி: +447720887759
கோபி — பிரித்தானியா  செல்லிடப்பேசி: +447951921251
தவேந்திரன்(தவா) — பிரித்தானியா  செல்லிடப்பேசி: +447405224791

piranavi

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com