மரண அறிவித்தல் - திரு காத்தாமுத்து ரஞ்சனதாஸ்

மலர்வு 29/05/1949                உதிர்வு 14/02/2014

பொது நலத்தையே தனது வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்த உன்னைப்போல் ஒரு ஜீவனை நாம் வல்வை மண்ணில் இனி எப்போது காணப்போகிறோம்.

வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், நெடியகாட்டை வளருமிடமாகவும், தெணியம்பையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு காத்தாமுத்து ரஞ்சனதாஸ் 14/02/2014 அன்று காலை நெடியம்பதியானடி சேர்ந்தார்.

அன்னார் ஐயாத்துரை காத்தாமுத்து நாகரத்தினம் தம்பதிகளின் இரண்டாவது அன்பு புதல்வரும், ஆறுமுகம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயராணியின் அன்பு கணவரும் காதலரும் ஆவார்.

லீலாவதி, பத்மாவதி, கமலாவதி, திலகவதி, ஞானாவதி காலஞ்சென்ற கப்டன் மோகனதாஸ், பிரேமதாஸ், ரவீந்திரதாஸ் காலஞ்சென்ற ஜீவதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

இந்திரலிங்கம் (பழம்), அமுதலிங்கம், ரட்ணசிங்கம் (AR), ஜெயராஜா (குட்டி), மகேந்திரராஜா (ராசுக்குட்டி) ஆகியோரின் மைத்துனரும்,

ராஜ்குமார், ரஞ்சினி, ராஜினி, முகுந்தராஜ், முரளீதரன், வாணி, ஷாமினி, காலம்சென்ற ரகு, சுகுமாரன், சபேசன், நித்தியா, லக்ஷ்மி, மைதிலி, ஆகியோரின் மாமனாரும், மகேந்திரா, பிறேமினி, மதன், ரேவதி, மாதவி, சாருஜா, தாரணி, சஜீவன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

00 94 (0)779786096 / 00 94 (0) 212055023

நிகழ்வுகள்

தகனம்
திங்கள்கிழமை 16/02/2014, 10:00 மு.ப
ஊரணி மயானம்

தற்கால வல்வை மண்ணின் ஒரே மைந்தன் நீயும் போய்விட்டாய். இனி எம்மை வழிநடத்த வல்வையில் சுயநலமில்லாத மனிதன் புதிதாக உருவாகவேண்டும்

நீ விட்டுச்சென்ற சுவடுகள் தொகுப்பு

ranjanadass

ranjanadass

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com