மரண அறிவித்தல்: திரு சபாரெத்தினம் பொன்னம்பலம்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 15.03.2016

யாழ்/ வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறைச் சந்தி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சபாரெத்தினம் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 15.03.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முன்னாள் பட்டிணசபைத்தலைவர் திரு.சபாரெத்தினம், பவளக்கண்டு தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற திரு. சிவகுருநாதபிள்ளை அரியரெத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற றஞ்சிதகுமார், நந்தகுமார், சாந்தினிதேவி மற்றும் றஞ்சினிதேவி, றஜனிதேவி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேதுலிங்கம் செல்வராணி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வகுமரன் (குமரன்), கிருசாந், செல்வசாந்தி, சஞ்சிகா, மோகனதாஸ், மதன்ராஜ், மதுமிதா இவர்களின் பாசமிகு பேரனும்,

கிருசாந், வியூதரனின் அன்புப் பட்டனும்,

காலஞ்சென்ற இரத்தினம்மா, விநாயகமூர்த்தி, குலமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வேலுப்பிள்ளை, சங்கரசிகாமணி, ஞானம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மற்றும் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற உலகராசா, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி, உலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமரர் சபாரெத்தினம், செல்வசிகாமணி மற்றும் அமரர் சக்திவேல், திருமதி சுகாஷினி உலகராசாவின் சகலனும் ஆவார்.

அன்னார காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், நவரெத்தினம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 16.03.2016 அன்று அன்னார் தற்போது வசித்து வந்த தெணியம்பை இல்லத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்று அதைத்தொடர்ந்து ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சிவா (மகன்) - இலங்கை 0094779105698
சங்கரசிகாமணி - இலங்கை 0094715837558