மரண அறிவித்தல்: திருமதி. சந்திரக்கண்டு மகாலிங்கம்

தோற்றம் xx.xx.19xx              மறைவு 13.01.2016

திருமதி. சந்திரக்கண்டு மகாலிங்கம் அவர்கள்13-01-2016 புதன்கிழமையன்று தனது81ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டஅன்னார், ஐயாமுத்து மகாலிங்கம் (அண்ணாச்சி மகாலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான உலாந்தா சின்னத்துரை, பார்வதியம்மா அவர்களின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான தேவராசா,தங்கநாயகி, நடனராசா ஆகியோரின் இளைய சகோதரியும்,

மணிவண்ணன்(அவுஸ்திரேலியா), அம்பிகைவதனா(பவா) (அவுஸ்திரேலியா), நிதிவண்ணன் (தங்கத்துரை) (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயவதனா (குட்டியா) அவர்களின் அன்புத்தாயாரும்,

ஜமுனா(அவுஸ்திரேலியா), அருளானந்தன்(அவுஸ்திரேலியா), குமுதினி(இலண்டன்), ஜெயராம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்தீபன், நிசாந்தினி, நந்தினி, பகீரதன், சங்கீதன் ,கல்யாணி, ராகவி,குமணன் ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கும் அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகட்கு
ம.மணிவண்ணன் (அவுஸ்திரேலியா) -61 2 97025852
அ.அம்பிகைவதனா (இலங்கை) - 94 78467921 / அவுஸ்திரேலியா - 61 2 98311191
ம.நிதிவண்ணன் (இலண்டன்) - 44 208 5693510
து.ஜெயராம் (இலங்கை) -94 76699456