மரண அறிவித்தல்: திரு. சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை

தோற்றம் 17.08.1930              மறைவு 08.03.2016

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை அவர்கள் (கொழும்பு மாநகராட்சி ஓய்வுபெற்ற வரைகலைநிபுணர்) மார்ச் 8, செவ்வாய்க்கிழமையன்று பிரம்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ராசரத்தினம் (கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தங்கராணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணியின் பாசமிகு கணவரும்,

மோகன் (பொறியியலாளர் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு), சுமதி (இந்தியா), இந்துமதி (மாலதி - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. சறோஜினி (றாகம போதனா வைத்தியசாலை), யுவராஜன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, ஆறுமுகம், மற்றும் மகமாசிதேவி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லப்பாக்கியம், மற்றும் புஸ்பராஜமணி (அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி, இராஜேந்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராணி (கனடா), இராசலிங்கம் (அவுஸ்திரேலியா), சந்திரலிங்கம் (வல்வெட்டித்துறை), செல்வராணி (கனடா), சிவரூபராணி (கனடா), ஆனந்தலிங்கம் (கனடா), ஞானலிங்கம் (நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி (கொழும்பு), அமிர்தலிங்கம் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமையன்று மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் 13ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 8 மணி முதல் 9:45 மணி வரையும் Chapel Ridge Funeral Home, 8911Woodbine Avenue, Markham, On. மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 9:45 மணி முதல் 11:45 மணி வரை கிரியை நடைபெற்று, பிற்பகல் 12:30 மணிக்கு Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, On (Stouffville and Woodbine) முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
புஸ்பராணி (மனைவி), மாலதி (மகள்), மோகன் (மகன்) - கனடா: +19057993291.