மரண அறிவித்தல் - திரு நடராசா இராமச்சந்திரன் (குச்சம் வைத்தி அண்ணா)

theiva

மலர்வு 14.07.1946                உதிர்வு 20.03.2014

வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க ஆரம்ப கர்த்தாவும் முன்னைனால் வல்வெட்டித்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் முன்னைனால் பருத்தித்துறை கடற்தொழிலாளர் ஒன்றியத்தலைவர் (சமாசம்). வல்வை குச்சம் வாணிபடிப்பக ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும். முன்னைனால் வாணிபடிப்பக சைனிங்ஸ் விளையாட்டுக்கழக தலைவருமாவார். வல்வை குச்சம் வாணிபடிப்பக கல்விச்செயற்பாடுகளில் மிகுந்த அக்கரை கொண்டு செயற்பட்டவரும் நிதிகளை வழங்கியவருமாவார் வாணிபடிப்பக ஆலோசகர்களில் ஒருவருமாவார் வல்வை குச்சம் வாணிபடிப்பக சமூக தலைமைத்துவ பண்புகளை வளர்த்தவருமாவார்.

வல்வெட்டித்தறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா இராமச்சந்திரன் (குச்சம் வைத்தி அண்ணா) 20.03.2014 இன்று வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி நடராசா தம்பதிகளின் மூத்த புதல்வனும், பத்மராணியின் அன்புக் கணவரும் நவரத்தினம் அன்னமுத்துவின் மூத்த மருமகனும் ஆவார்.

செல்வச்சந்திரன் ( கிளியப்பா) இலங்கை, மீனலோசினி ( இந்தியா ), பாலச்சந்திரன் (லண்டன்), ஞானச்சந்திரன் (கனடா), தருமச்சந்திரன் (லண்டன்) ஆகியோரினது சகோதரனும் ஆவார்.

சந்தானலட்சுமி (சகிலா) (லண்டன்), தனலட்சுமி (இலங்கை) , சீதாலட்சுமி (ஜேர்மனி), மாவீரன் நிழாந்தி என அழைக்கப்படும் லட்சுமி,  முகுந்தன் (கனடா),  மாதவன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
குணரட்ணம் (லண்டன்), ஸ்ரீபத்மநாதன் (இலங்கை), ஸ்ரீரஞ்சன் (ஜேர்மனி),  ஜெயந்தா (கனடா), வினோஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

செந்தூரன், மகேஸ்வரன், சிந்துஜா, மயூரதி, நீரஜா, கானப்பிரியா, சுபர்ணா, மனோஜன், தனுஜா, பிரசாந்த், ஜனுஷா, நிதுஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

துகவல்களுக்கு :
குடும்பத்தினர்

தொடர்வுகளுக்கு :
சகிலா : 07438367394 லண்டன்
பாலச்சந்திரன் : 07404043491 லண்டன்
தருமச்சந்திரன் : 07466455549 லண்டன்

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com