மரண அறிவித்தல் - திரு சபாரெட்ணம் விஸ்வநாதன்

thuraisingam

மலர்வு 13.04.1943                உதிர்வு 24.06.2014

யாழ். தொண்டமானாறு காட்டுப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெட்ணம் விஸ்வநாதன் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வாணிபடிப்பக மூத்த உருப்பினறும் வாணிபடிப்பக ஆலோசகர்களில் ஒருவருமாவார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரெட்ணம், ராஜலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(கட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகெளரி(கனடா), ஸ்ரீவாணி(கனடா), ஜெயலக்ஷ்மி(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகநாதன்(இந்தியா), ரகுநாதன்(இந்தியா), சிவகணேசநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபாலகிருஷ்ணன்(லவன்-கனடா), அசோகன்(கனடா), இராஜேந்திரகுமார்(கனடா), வித்திய ஸ்ரீ(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி(இந்தியா), காலஞ்சென்ற ராதாமணி, ஜெகதீஸ்வரி(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா), செல்வராணி(கனி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்த், சரண்யா, ஷினேகா, அபிராமி, ரிஷிகேஷன், ஸ்ரீராம், கெளதம், கெளசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரபாகரன்(மகன்)

தொடர்புகளுக்கு
மனைவி — கனடா: +14167470125
பிரபு(மகன்) — கனடா: +14169176309
லவன்(மருமகன்) — கனடா: +16474031730
அசோக்(மருமகன்) — கனடா: +14166718670
ராஜேந்திர குமார்(மருமகன்) — கனடா: +16479736599
தாஸ்(சகோதரர்) — கனடா: +14162927241