1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - திரு.கோணலிங்கம் அமுதலிங்கம்

sihamani

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
03.11.62           05.01.2012

பிரித்தானியா லண்டன் ரூட்டிங் நகரை வசிப்பிடமாகவும் நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற திரு.கோணலிங்கம்.அமுதலிங்கம் ஓராண்டு நினைவு திதியை முன்னிட்டு கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னார் வாழ்ந்த இல்லத்தில் நடைபெறும் என்பதனை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

உருண்டுவிட்டது ஒரு வருடம் உள்ளக்காயம் ஆறவில்லை
உம் நினைவுகளால் உறக்கம்தான் தொலைந்ததுவே
இனி எங்கு காண்போம் என் சொல்லி அழைப்போம்
வார்த்தை ஏதுமில்லை எம் துயர் துடைக்க
உறவுகளைப் பிரிந்து தேசம் கடந்து உழைப்பால் உயர்ந்து
உத்தரமாய் எம் அனைவரையும் உயர வைத்தீரே
கால விறுதியில் ஊர் செல்லும் உங்கள் ஆசையும் தீரவில்லையே
பார் போற்ற வாழ்ந்த என் கண்ணாளனே!
பரிதவிக்கின்றோம் உங்கள் நினைவுகளால்
பிரிவின் வலி ஆறாத வடுவாய் எம் மனங்களில்
பிள்ளைகளோ ஏங்கித் தவிக்கின்றனர் உங்கள் நினைவுகளுடன்
கால தேவன் கருணையின்றிப் பிரித்தானே!
என்ன பாவம் செய்தோம்!
அத்தான் என்று கதறியழத்தான் முடிகின்ற்றது
அப்பா என அழும் குழந்தைகளுக்கு
ஆறுதல் தரவேனும் என்னால் முடியவில்லை
ஈராறு மாதங்கள் கடந்தாலும்
ஆறவில்லை எம் மனது

உங்களின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
மனைவி, பிள்ளைகள்,
அண்ணன்(தமையன்) குடும்பத்தினர்

தகவல்
மனைவி (உஷா) - 02086720598
மகன் (றஜீவன்) - 07413783130
கணேஸ் (தமையன்) - 07794427358

 

amuthan

amuthan

amuthan

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com