எங்கள்சகோதரன் பைலட்ஞானம் (பாலசுப்பிரமணியம்  சிவஞானதாஸ்) அவர்களின் மறைவிற்கு வல்வை டொட் கொம்மின் கண்ணீர்க் காணிக்கைகள் உரித்தாகட்டும்.

pilot

தோற்றம்: 28/12/1966                மறைவு: 29/04/2012

பைலட் ஞானம்?......

நல்லவராக நடிப்பவர்
முன்னால்
நல்லவனாக வாழ்ந்தவன்
நீதான்

வல்வையரென்று சொல்பவர்
முன்னால்
வல்வையனாக வாழ்ந்தவன்
நீதான்

சமூகத்தை சொல்பவர்
முன்னால்
சமூகத்திற்காக வாழ்ந்தவன்
நீதான்

ஒளிவு மறைவு உனக்குள்
ஏது
உனதுமனதில் இல்லை
சூது

எப்பொழுதும் எவருக்காகவோ
சிந்திப்பவன் நீ
இப்பொழுது உன்னைப்பற்றி
சிந்திக்கிறது உலகம்

உனக்குள் ஒளிர்ந்த
உண்மையின் விளக்கு
இனியில்லை என்பதால்
துடிக்குது மனசு

வேப்பமரத்தில் அன்னபூரணி
வேம்படியில் பைலட் ஞானம்
தத்தாஉனக்கு தம்பிபிள்ளை
கடலைக்கடந்து புகளைத்தந்தோர் 

நீயோ கடலைக்கடந்தும்
ஊரை நினைந்தாய்
வல்வைத்தாயின்
மகனாய் வாழ்ந்தாய் 

ஓடியோடி உதவிய
உள்ளம்
ஓய்ந்துகொண்டதால் பதறுது
வல்வை

நீகாணவிரும்பியது தமிழர்
தேசம்
எதற்காக போகின்றாய்
தூரதேசம்

நேற்றுஎம்மை தேடியவன்
நீ
இனிஉலகம் முழுக்க
உன்னைத் தேடும்

காற்றில்மட்டுமா உயிர்கள்
கலக்கும் - இனி
காலம் முழுக்க உன்நினைவு
கலக்கும்

ஊருக்காக நீயே அழுதாய்
இனிமேல்
உனக்காக ஊரே
அழும்

உற்றார் உறவினர் - உனது
கண்கள் கழகமும்
ஊரும் உனது
எண்ணம்

வல்வை டொட்கொம்
மலர்ந்தபோது
துணிவு கொடுத்தாய்
தொடர்ந்து வந்தாய்

ஊருக்காகவே நீயும்
நாமும்
உண்மைநாளை உலகம்
புரியும்!.......

வல்வை டொட்கொம்மின் ஆரம்பநாட்கள் முதல் அதன் வளர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் முன்னின்ற எங்கள்சகோதரன் பைலட்ஞானம் (பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ்) அவர்களின் மறைவிற்கு வல்வை டொட் கொம்மின் கண்ணீர்க் காணிக்கைகள் உரித்தாகட்டும். 
வல்வை.கொம் (05.05.2012) 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com