கண்ணீர் அஞ்சலி

திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்)

pilotbyfriends

தோற்றம்: 28/12/1966                மறைவு: 29/04/2012

வல்வை மண்ணின் வல்விருந்தே
வளமான ஞானச்சுடரொளியே
பொல்லாத காலனுடன்
போவதற்கு காலமிதோ?

யாரோடும் நட்பானாய்
யமனோடும் ஏன் சேர்ந்தாய்?
கம்பீர நடையுடனே நீ வருவாய்
சிரித்து நின்றே கதை சொல்வாய்

சபை நடுவே நீயிருந்தால்
சிரிப்புக்கே பஞ்சமில்லை
வல்வை நிகழ்வெல்லாம்
தவறாது நீ வந்தாய்

விளையாட்டுத் திடலெல்லாம்
உற்சாக உயிர் தந்தாய்
தளர்ந்து நீ நின்றதில்லை
தீரமுடன் நீ வாழ்ந்தாய்

ஆசை மனைவிமக்கள் உயிரென்றாய்
ஆரோடும் சொல்லாமல்  ஏன் மறைந்தாய்?
நீயில்லா ஊர் எமக்கு மகிழ்வாமோ?
நண்பனே திரும்பி வந்திடய்யா!

உந்தன் ஆத்மா சாந்தியடைய
மனமுருகிப் பிரார்த்திக்கின்றோம்.

யாழ் கம்பர்மலை விளையாட்டுக் கழகங்கள் (யங் கம்பன்ஸ், கழுகுகள்)

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com