மரண அறிவித்தல் - திரு கனகசபை கனகராஜா

வையகம்            வையகம்
வந்தது              மறந்தது
17.05.1947           21.05.2011

வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியில் வாழ்ந்துவந்தவருமான கனகசபை கனகராஜா அவர்கள் 21-05-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற கனகசபை, நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,


பிரேமாவதி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
றமணன், றஜிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹரிகரன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பிரஷன்யா(கனடா) அவர்களின் அன்புப்பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-05-2011 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று, இந்தியா திருச்சியில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
பிரேமாவதி — இந்தியா தொலைபேசி : +914312770624 / +914312770624
றமணன், ஹரிகரன், றஜிதா — கனடா தொலைபேசி: +14164123533
பிரேம்குமார்(மைத்துனர்) — இந்தியா செல்லிடப்பேசி: +919790448233

kanagasabai

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com