மரண அறிவித்தல் - திருமதி நவரெத்தினம் மங்களாதேவி

வல்வையில் வந்தது்        வையகம் மறைந்தது
12/01/1956           22/02/2012

வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவரெத்தினம் மங்களாதேவி 22/02/2012 அன்று இறைவன் அடி சேர்ந்தார்.

அன்னார் நாகராசா நவரெத்தினத்தின் அன்பு மனைவியாரும். காலம் சென்றவர்களான ஆலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி இலட்சுமி அம்மாவின் அன்பு புதல்வியும், நாகராசா வள்ளியாச்சியின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் அன்னராணி (கிளி) இலண்டன்,  புவனேஸ்வரி (மயில்) இலங்கை, குயிலம்மா இலங்கை, காலம் சென்ற திருமதி சபாரெட்ணம் பரமேஸ்வரி, நகுலராசா (நகுலன்) இந்தியா, அர்ச்சுனராசா (சின்னண்ணா) இலண்டன், தருமராசா (தருமன்) இந்தியா, வீமராசா (குட்டியன்) இலங்கை, அருணாசலம் (அப்புச்சி) கனடா, சகாதேவன் (தேவன்) கனடா அவர்களின் அன்பு சகோதரியும்.

லோகநாயகி , ஞானசெளந்தரி, வனஜா , துரைராஜா ஆகியோரின் மைத்துனியும், திருமதி மனோராணி அவர்களின் சம்மந்தியும் ஆவார்.
திருமதி சாருமதி, சுதர்சன் இலண்டன், சுஜீவன் இலங்கை , சுஜன் இலங்கை ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேந்திரராஜா சுதர்சனின் அன்பு மாமியாரும், தருஜனின் அன்பு பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23/02/2012 வியாழக்கிழமை 23/3 முதலாவது வீதி, இரண்டாவது ஒழுங்கை, லிங்கநகர் , திருகோணமலை இல்லத்தில் நடைபெற்று 4 மணியளவில் திருகோணமலை இந்து  மயானத்தில் பூதவுடல் தகனம்  செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
நவரெத்தினம் - 0094262227108
சாருமதி - 00442086897338
சுதர்சன் - 0044 -7904776526
சுஜீவன் - 0094778914276
சுஜன் - 0094 778808442

mangala

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com