மரண அறிவித்தல் - திருமதி சபாரத்தினம் பரமேஸ்வரி

santhirasekaram

வல்வையில் வந்தது 17.08.1942 வையகம் மறைந்தது 24.02.2011

வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும் சிலாபம் குசலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சபாரத்தினம் பரமேஸ்வரி 24.02.2011 அன்று இறைவன் திருவடியடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆலடியை சேர்ந்த குமாரசாமி லட்சுமி அம்மாவின் அன்பு புதல்வியும் தொண்டமனாறைச் சேர்ந்த சின்னையா இராசம்மாவின் அன்பு மருமகளும் ஆவார். இவர் அன்னராணி லண்டன்(கிளி), புவனேஸ்வரி இலங்கை(மயில்), குயிலம்மா இலங்கை(குயில்), பரிமளாதேவி இலங்கை(வண்ணம்), மங்களாதேவி இலங்கை(மங்களம்), நகுலராசா இந்தியா(நகுலன்), அர்ச்சனராசா லண்டன்(சின்னண்ணா), தருமராசா இந்தியா(தருமன்), வீமராசா இலங்கை(குட்டி), அருணாசலம் கனடா(அப்புசாமி), சகாதேவன் கனடா(தேவன்) ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா , செல்வராஜா, சற்குணநாதன், குணரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

இவர் சண்முகநாதன் லண்டன்(சம்மு), ஸ்ரீவிஜயநாதன் லண்டன்(ஸ்ரீ), ஸ்ரீகதிர்காமநாதன் இலங்கை(ரவி), சிதம்பரநாதன் கனடா(நாதன்), யோகேஸ்வரி இலங்கை(குஞ்சு) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜமுனாராணி, கல்பனா, கவிதா, சுரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும் சுதர்சன், தனோஷ், குருபரன், பிரதீஸ், அபிராமி, கரன், ஸ்ரீவாணி, ராகவி, ஸ்ரீபவன், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.02.11 ஞாயிற்றுக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4 மணி அளவில் சிலாபம் கருக்குப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.தகவல் குடும்பத்தினர்

காந்தரூபன் மாஸ்டர் - 07940405995 (லண்டன்)
சண்முகநாதன் - 02086485059 (லண்டன்)
ஸ்ரீவிஜயநாதன் - 02086406642 (லண்டன்)
ஸ்ரீகதிர்காமநாதன் - 0094776646760 (இலங்கை)
சிதம்பரநாதன் - 0017808713893 (கனடா)

parameswary