இரண்டாம்ஆண்டு நினைவலைகள்

பத்மநிதி பிரேமச்சந்திரன்

காட்டுவளவு                                                                                   வல்வெட்டித்துறை
மலராய் : 12-03-1959                                                                         விதையாய் : 08-05-2009

திதி : 17-04-2011

எங்களின் பாசப்பறவையே எங்களை பரிதவிக்கச் செய்துவிட்டு
ஏன் பறந்து சென்றீர்கள்
எங்கள் கண்மணியே உங்கள் கண்ணுக்குள், எங்களை கண்ணை
இமைகாப்பது போல் காத்தீர்கள்
நாம் இப்போது கண்ணீரில் மிதக்கிறோம்
எங்கள் செல்வத்திருமகளே எங்கள் எல்லோரையும் நல்வழியில்
நடத்திச் சென்றீர்கள்
இப்போது தெய்வமாய் இருந்து காக்கின்றீர்களே
எங்களின் குலவிளக்கே  எங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிநீர்கள்
கொடியவன் கொட்டிய இடிமின்னலில் அணைந்ததோ எங்கள் குலவிளக்கு
பௌர்ணமி என்றால் இருள் நீங்கி ஒளிதரும் நாள் ஆனால்
எங்கள் வாழ்வில் சித்திரை பௌர்ணமி இருள் சூழ்ந்த நாள்
மலர்ந்த மலர் போல் உங்கள் திருமுகம்
இதை இனி எப்போது காண்போமோ
சிதறிய முத்துக்கள் போல் உங்கள் சிரிப்பொலி
இதை இனி எப்போது கேட்போமா
ஆற்று நீர்போல் உங்கள் பாதம் ஓடிக் கொண்டிருந்தது
இப்போது குளத்து நீர்போல் ஓய்ந்துவிட்டது
காலம் முழுதும் எங்களை சந்தோஷமாக வைத்திருந்தீர்களே
இப்போது உங்களுடன் எங்களின் சந்தோஷத்தையும் எடுத்துச் சென்றுவிட்டீர்களோ
நீங்கள் இந்த மண்ணைவிட்டுச் சென்று இரண்டான்று காலம் சென்றுவிட்டது
ஆனால் எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் மனதில் என்றும் வாழ்வீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
வல்வை முத்துமாரி அம்மனை பிரார்த்திக்கிறோம்

 

இங்ஙனம் குடும்பத்தினர்  

தொடர்புகளுக்கு 
கணவர் ராஜ், தாய் தணிகாசலம் மெஞ்ஞானமலை, மாமா, மாமி.

pathmanithi

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com