பதினாறாவது நாள் அந்தியேட்டி அறிவித்தல் - திருமதி அன்னலெட்சுமி மால்மருகேசன் (பொன்னா)

மண்ணில்          விண்ணில்
15-11-1933           02-02-2012

திருமதி அன்னலெட்சுமி மால்மருகேசன்(பொன்னா)
மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட எங்கள் அன்புதெய்வமே!
உங்கள் ஆத்மசாந்திக்காக அஞ்சலி செலுத்துகின்றோம்!

அன்னார் காலஞ் சென்ற திரு: ஐயாத்துரை மால்மருசேனின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான திரு, திருமதி: சிவகுருப்பிள்ளை அவர்களின் அன்புமகளும், காலஞ் சென்றவர்களான திரு, திருமதி: சுப்ரமணியம் ஐயாத்துரை அவர்களின் அன்புமருமகளும், மற்றும் லலிதாபவானி, சுதர்சன் (ஜேர்மனி), ராதா (கனடா), தோகேசன்(அமரிக்கா), சுமதி(அமரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பசுபதி, கலாரஞ்சனி; (ஜேர்மனி), ஜெயச்சந்திரன் (கனடா), சாந்தா (அமரிக்கா), பரமநாயகம் (அமரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற திருமதி.நவரெத்தினஅம்மாள்,  மற்றும் நவமணிஅம்மாள், நாரயணசாமி, ஆர். எஸ். சிவசுப்பிரமணியம், சீதாலக்ஷ்மி, கமலாதேவி, காலஞ்சென்ற திரு. தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மற்றும் ப்ரணவன், நந்திகா, குமரன், மயூரன், ஜெகனியா, தர்ஷிகா, மனோஜ், திவ்யா  ஆகியோரின் அருமைப்பேத்தியுமாவார்.

எமது குலம் விளங்க அறவழி வாழ்ந்து, சிவபதம் எய்திய அமரர் திருமதி: அன்னலெட்சுமி மால்மருசேன் அவர்கள் 02-02-2012ல் மறைந்துவிட்ட செய்தி அறிந்து எமக்கு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், தேவையான உதவிகளை புரிந்தவர்களுக்கும், எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது அந்தியஷ்டி கிரியைகள்;  7/6H ஸெனனாயக்கா பிளேஸ், தெகிவலை, ஸ்ரீலங்காவில் உள்ள  அன்னாரது இல்லத்தில் 17-02- 2012 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்னாரது ஆத்மசாந்திப்பிரகர்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்கள்

தொடர்புகளுக்கு: 416-757-0631

ponna

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com