மரண அறிவித்தல் - திருமதி பூரணலக்ஸ்மியம்மா  வைரமுத்து (பூரணம் அக்கா)

வல்வையில்            வையகம்
வந்தது              மறந்தது
28.09.1923           14.05.2011

திருமதி பூரணலக்ஸ்மியம்மா  வைரமுத்து (பூரணம் அக்கா)
வல்வெட்டித்துறை நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த பூரணலக்ஸ்மிஅம்மா (பூரணம்) வைரமுத்து அவர்கள் 14.05.2011 சனிக்கிழமை கனடா (Toronto) வில் காலமானார்.

இவர் விநாயகமூர்த்தி வைரமுத்து (ரெத்திமாஸ்டர்) வின் அன்புமனைவியும் கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் ஆசைமகளுமாவார். ஞானகுரு, புவனச்சந்திரன், பழனிவேல், ஜெயச்சந்திரன், கலாராணி, ஆகியோரின் பாசமிகுதாயாரும் பத்மாவதி, பவானி, கலைவாணி, ஜெயசாந்தி, இரவீந்திரன் ஆகியோரின் அன்புமாமியாரும் சுப்பிரமணியராசா, இறங்கவடிவேல், ஆறுமுகவேல் ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார். அசோக்குமார், Hema  ராஜ்குமார், ரவிநேசன், கௌரி, பிரியா, விக்னேஸ்வரன், வசந்தி, விஜயானந்தி, ஜெயானந்தி, ஜெயமதி, ஜெயராதை, லக்ஸ்மிபிரியா, கிரிகரன் ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் முன்னிரவு 9.00 வரை  3280 Sheppard Ave அமைந்துள்ள Highland Funeral Home இல்  பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இறுதிக்கிரியைகளுடன் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றுமெல்லோரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தொடர்புகளிற்கு
புவனச்சந்திரன்(மகன்) 001 416 691 9057 கனடா
கௌரி     (பேத்தி)  001 905 231 3465 கனடா

pooranam

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com