மரண அறிவித்தல் - திரு கந்தசாமி உருத்திராபதி

(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர், Retired Civil Engineer, Irrigation Dept.)

மண்ணில்          விண்ணில்
01-11-1929           15-12-2011

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உருத்திராபதி  அவர்கள் 15-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தங்கம்மா - நவரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான தருமரத்தினம் (தங்கவேலாயுதம்), இராசரத்தினம் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற பூரணரத்தினத்தின் (தங்கக்கிளி) அன்புக்கணவரும்
குகலட்சுமி, ரூபலட்சுமி, சேகர், காலஞ்சென்ற சுதாகர், காலஞ்சென்ற சிறீதர், காலஞ்சென்ற உதயலட்சுமி, யசோதர், கஜலட்சுமி ஆகியோரின் அன்புத்தந்தையும்,

இரஞ்சித் கிருஸ்ணகுமார், பாலேந்திரன், ஜெயதரன், குமுதினி, அனிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும், மீரா, மயூரன், சுதாகரன், துவாரகா, சிறீதர்ஸன், மகிஷா, அபிதரன், ஆரபி, பைரவி, எழிலன் ஆகியோரின் அன்புப்பேரனும், ஆஷினியின் அன்புப்பூட்டனும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி, காலஞ்சென்ற சோமசேகரம், பொன்னம்பலம், பாய்க்கியலட்சுமி, தனலட்சுமி, காலஞ்சென்ற இராசலெட்சுமி, இராதாகிருஸ்ணன், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் 17-12-2011 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 1:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பிள்ளைகள்
சில்லாலை, வேம்படி, வல்வெட்டித்துறை.

தொடர்புகளுக்கு:

UK 00 44 1895 813492
UK 00 44 208 450 0547
New Zealand 00 64 9443 2390

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com