31ம் நாள் நினைவாஞ்சலி - அமரர் திரு.தம்பிராஜா தேவசிகாமணி

(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், தி கலைமகள் மகா வித்தியாலயம், யாழ் தொண்டைமானாறு மகா வித்தியாலயம்)

அன்னைமடியில்           இறைவன்அடியில
26.05.1947           21.06.2011

திருகோணமலையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையையும், திருகோணமலையையும் வசிப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிராஜா தேவசிகாமணி அவர்கள் 21.06.2011 அன்று திருகோணமலையில் அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராஜா சிவபாக்கியம் அவர்களின் மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுழுகக்கடவுள்(பழனி அண்ணா) அம்பிகாரெத்தினம் தம்பதிகளினதும், காலஞ்சென்ற நாராயணசாமி இராஜேஸ்வரி தம்பதிகளினதும் மருமகனும், காலஞ்சென்ற சுகிர்தலீலா, உமாதேவியினதும் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நடனசிகாமணி, சிவசுப்பிரமணியம், பாஸ்கரநாதன், காலஞ்சென்ற கமலதாஸ் ஆகியோரின் அன்புச்சகோதரரும், வத்சலா, மயூரன், உதயா, துஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரெஜினோல்ட் ரகுநாதன், மேரி எவரெஸ்டா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷெரோன் சாகித்தியன், சுகிர்தன், ஜோயல் சாதகன் ஆகியோரின் ஆசைப் பேரனுமாவார். அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 20-07-2011 புதன்கிழமை காலை 6.00 மணியளவில் கன்னியா வெற்றீர் ஊற்றில் நடைபெறும் என்பதையும், 21.07.2011 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (456, திருஞான சம்பந்தர் வீதி, திருகோணமலை) நடைபெறவுள்ள சபிண்டீகரண கிரியைகளிலும், மதியபோசனத்திலும் கலந்து கொண்டு, அன்னாரது ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகட்கு
மனைவி : 0094-26-2224836
மகள் - வத்சலா : 0094-777286168
மகன் - மயூரன் : 0094-773529340


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com